INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

September 2010

சென்னையில் பிஜெக்கு எதிரான கண்டன போஸ்டர்!

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் சென்ற  செப்டம்பர் 5ஆம் தேதி இரவு தொழுகை சம்பந்தமாக நடைபெற்ற தகராரில் 2 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் உட்பட 4 பேர்  படுகாயம் அடைந்தனர்.

இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு ஆதரவாக துப்பாக்கி சூடு நடத்திய கொலை குற்றவாளி ஹஜ் முஹம்மது என்பவரின் செயல்பாட்டை ஆதரித்து பேசிய பிஜெ மீது தமிழக முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தேசியலீக்கோ ஒருபடி மேலே போய் சுவரொட்டிகளை அடித்து சென்னை முழுவதும் ஒட்டியுள்ளது. 

அச்சுவரொட்டி உங்கள பார்வைக்கு

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் அழைப்பு!

இறையருளால் தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக சமுதாயத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்  நிர்வாகிகள் அரசு மற்றும் பொது நல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் சுற்றுலாத்துறை சார்பாக படகு சவாரி துவக்க நிகழ்ச்சிக்கு நம் கடலூர் மாவட்டத் தலைவர் கவுஸ் ஹமீது கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ். அதன் பேப்பர் கட்டிங் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!

கடந்த மாதம் 28ஆம் தேதி சிவங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நொச்சியேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற சகோதரர் கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் தலைவர் முஸம்மில்ஹார், செயலாளர் ஹஸன்அலி மற்றும் பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவருடைய பெயர் அப்துல்லாஹ் என மாற்றப்பட்டு அரசு கேஸட்டில் மாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரையில் இஃப்தார் நிகழ்ச்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி சென்ற மாதம் 29.08.2010 அன்று கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக குழந்தை நல மருத்துவர்கள் ஜவாஹிர் ஹுஸைன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

INTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்!

பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

தானத்தில் சிறந்தது இரத்தத் தானம்!

'யார் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றிகிறாரோ! அவர் ஒரு சமுதாயத்தை காப்பாற்றியத்தற்கு சமமாவார்'. (அல்குர்ஆன் 5 : 32)
 


 

திருச்சியில் இஸ்லாத்தை ஏற்ற பெண்!

ஒரு முஸ்லிம் தான் செய்கின்ற பணிகளிலேயே மிகச் சிறந்த பணி. ஏக இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அழைப்பதே!.

அப்பணியினை ஒரு அமைப்பு செய்தால் இன்னும் நலமாக இருக்கும். இச்சிறப்பு மிகுந்த பணியினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்ட தாஃவா குழு மூலம் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு ,இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்குகிறார். நம் மாநில பேச்சாளர் முகமத் யாசிப்.

திருச்சியில் கிருத்துவப் பள்ளியில் இஸ்லாமிய அழைப்புப் பணி!

திருச்சி செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் கடந்த 07.09.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

அதில் மாநிலப் பேச்சாளர் நிழாமுதீன் அஷ்ரஃபி, இறைவனின் கருணை என்ற தலைப்பில் மிக அருமையான உரை ஒன்றை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் ஸெபஸ்டின் அவர்களுக்கு திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் ஒன்று வழங்கப்பட்டது. அதை பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

திருச்சியில் பெருநாள் தொழுகை! உற்சாகத்துடன் மக்கள் பங்கேற்பு!

கடந்த 10-09-2010 அன்று இந்திய தௌஹீது ஜமாத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

இதில் திருச்சியில்முதல் முறையாக உழவர் சந்தை திடலில் மாநில செயலாளர் சகோ :செங்கிஸ் கான் தலைமையில் பெருநாள் தொழுகை மிகச் சிறப்புற நடைபெற்றது. இதில் பெரும் திரளாக ஆண்களும், பெண்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தென்காசியில் இரத்த தான முகாம்!

தென்காசி அரசு மருத்துவமனையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தானம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் பாக்கர் கலந்து கொண்டு சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ஸெய்யது அலி, மருத்துவமனை செயலாளர் ஸாதிக் அலி மற்றும் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்காசியில் ஃபித்ரா விநியோகம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்காசி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் சிறப்பாக நடைபெற்றது.

12,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகரத்தலைவர் ஸெய்யது அலி, துணைத் தலைவர் ராஜ் முஹம்மது, பொருளாளர் அய்யூப் அன்ஸாரி, தஃவா குழுத் தலைவர் ரம்ஜான், மருத்துவ அணிச் செயலாளர் ஸாதிக் அலி மற்றும் 9வது வார்டு கவுனிசிலர் முஹம்மது ராசப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவிடைச் சேரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இதஜ நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் சரகம் திருவிடைச் சேரியில் கடந்த 05.09.2010 அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

INTJ திரட்டி

Syndicate content