INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

August 2010

இதஜ சேப்பாக்கம் கிளை சார்பாக 20 நாட்களில் திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி!

இன்ஷா அல்லாஹ் வரும் ரமதான் பிறை பத்தில் இருந்து முப்பது வரை இந்திய தவ்ஹித் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் “இருபது நாட்களில் இறை வேதம் கற்கலாம்” எனும் முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஓத தெரியாதவர்களும், ஓதி மறந்தவர்களும் பங்கேற்று ரமதானை பயனுள்ளதாக்கலாம். உடனே முந்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து பத்து நன்மையை பெற்று தரும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து இம்மை மறுமை வெற்றியை பெறலாம்.

தஞ்சை நாச்சியார்கோவிலில் இரத்த தான முகாம்!

 

இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நாச்சியார்கோவில் கிளை சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

மனித நேய உதவிக்காக நம் அனைவரையும் அழைக்கிறது நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நாச்சியார்கோவில் கிளை.

நாச்சியார் கோவிலில் மக்களை அழைக்கிறது... மாமறை அழைக்கிறது...!!

உலக மக்களுக்காக அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆனை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கும் அரிய நிகழ்ச்சி தமிழகம் எங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தால் கொண்டு செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் கிளை சார்பாக திருக்குர்ஆன் மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.

திருச்சியில் இதஜவின் சுதந்தின தின பொதுக் கூட்டம்!

அல்ஹம்து லில்லாஹ்! நேற்று திருச்சி தென்னுர் குத்பிஷா நகரில் நடை பெற்ற இதஜ சுதந்திர தின பொது கூட்டத்தில் எஸ்.எம்.பாக்கர் “இந்திய விடுதலை” எனும் தலைப்பிலும், தொண்டியப்பா “இஸ்லாத்தில் சுதந்திரம்” எனும் தலைப்பிலும், செங்கிஸ் கான் 'இதஜவின் பணிகள்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

திருச்சியில் இதஜ சார்பாக ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள்!

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி கிளை சார்பாக ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

தினமும் இஃப்தார் ஏற்பாடுகள் மற்றும் நபி வழியில் இரவு தொழுகை அதை தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் . முன்னதாக நடைபெற்ற மாவட்ட பொது குழுவிலும் கலந்து கொண்டார்.

 

இதஜ ஆர்ப்பாட்ட எதிரொலி! அப்பாவி ஆலிம் மற்றும் இளம் பெண் விடுதலை!

அல்ஹம்துலில்லாஹ்!

அப்பாவி ஆலிம் ஒருவரையும், இளம் பெண் ஒருவரையும் அடைத்து வைத்து அழிச்சாட்டியம் செய்த வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்  நடத்த இருந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் அறிவிப்பை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள், நம் நிர்வாகிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை எனும் பெயரில் கைது செய்யப் பட்டிருந்த பள்ளி இமாம் மற்றும் அப்பாவி பெண்மணி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லா புகழும் வல்ல இறைவன் ஒருவனுக்கே!

பிஜே அவர்களின் முடிவு!

6 மாதங்களுக்கு இனிமேல் மார்க்க பணிகள் மட்டுமே தம்மால் செய்யப்டும் என்று அண்ணன் பிஜே ஆன்லைனில் அறிவித்துள்து மகிழ்ச்சியான விடயம். மார்க்கப் பணி மட்டும் என்பதன் மூலம் தனி நபர் விமர்சனம் எனும் தரங்கெட்ட வேலையையும் அண்ணன் 6 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் என்பது புலன் ஆகிறது.

ஆயுள் காலம் முழுவதும் எடுத்து இருக்க வேண்டிய முடிவை  வெறும் 6 மாதம் எடுத்துள்ளதன் மூலம் மகிழ்ச்சிக்கு மத்தியிலும் ஒரு சிறிய கவலையை கொள்கை உள்ளங்களுக்கு தருகிறது.

-ஸராஃபுதீன், ஸ்ரீலங்கா.

தவ்ஹீத் என்ற போர்வையில் இத்தனை அசிங்கம் தாங்கிய ஆலிம்களா..!?

 செங்கிஸ்கான் அவர்களின் ஏகத்துவம் பற்றிய செய்தி அறிந்தவுடன் ஏகத்துவம் பத்திரிக்கை வாங்கி படித்தேன். நவுதுபில்லாஹ் இது ஒரு மஞ்சள் பத்திரிக்கையின் மாதிரி வடிவம் என்றால் அது மிகையாகாது. 

மனிதம் செத்த இந்திய தலைநகர்!

இன்று நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி நம் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. பிஹாரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வேதனையில் துடியாய் துடித்துள்ளார். அப்பாதையை கடந்த சென்ற எந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் அப்பெண் ஒரு குழந்தையை பெற்று விட்டு வேதனை தாளாமல் இறந்தே போனார்.

புதிய உலகம் காண புறப்பட்டு வந்த மகவின் அழுக்குரல் கேட்டும் யாரும் வரவில்லை. வேதனையில் அழுது அழுது இறந்த போன தாய் ஒருபுறமும் பிறந்த சில மணித்துளிகளில் பசியால் துடித்த மகவு மறுப்புறம்.

'தூங்கும்' எம்.பி. நிதி; நமது எம்.பி.க்களின் நிலை!

பாராளுமன்றத் தேர்தலில் நமது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது, தொகுதிக்கு தேவையான விஷயங்களை பாராளுமன்றத்தில் முழங்கி, நிதியை பெற்று நாங்கள் தொகுதியின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றெல்லாம் கர்ஜிப்பதை நாம் அறிவோம்.

மதானி என்ன? பயங்கர தீவரவாதியா? முகாமிட்டு கைது செய்ய...!!?

கேரளா மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடறிந்த அறிஞருமான அப்துந்நாசர் மதானி அவர்கள், பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

INTJ திரட்டி

Syndicate content