INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

June 2010

கர்ப்பிணிகள் மீன் அதிகம் சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது

கர்ப்பிணிப் பெண்கள் மீன் வகை உணவுகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டன. இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இதன் முடிவில், மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக்கல்.
 
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! 

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! 

குழந்தை நலக் குறிப்புகள்

நோய்த்தடுப்பு : தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.

உதவிடுவீர்!

பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர் B. தமீமுல் அன்ஸாரி (த/பெ. K.M. முஹம்மது பாஷா) என்ற சகோதரருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சுமார் ஆறு இலட்சம் ரூபாய் தேவைப்படுவதால் சமுதாய மக்களிடம் உதவி கோரியுள்ளார். 


 
வசதியுள்ளவர்கள் நிதியுதவி தந்துதவுமாறும், வசதியற்றோர் அவரின் பரிபூரண உடல் நலத்திற்கு துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 

பரங்கிப்பேட்டையில் இதஜ சார்பாக இலவச தண்ணீர் பந்தல்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச தண்ணீர் பந்தல் கடந்த 05.06.2010 அன்று துவங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியினை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மத் யூனுஸ் பொது மக்களுக்கு குளிர்ந்த மோரை  வழங்கி துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட துணை தலைவர் ஹமீது கவுஸ், கிளை  தலைவர் சுல்தான் அப்துல் காதர், மீ மே. இப்ராஹீம் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கீழக்கரையில் ஜும்ஆ பேரூரை

கீழக்கரையில் கடந்த 11.06.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ பேரூரை  கே.ஈ.ஸி.டி தொழுகை கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது “பெற்றோர் நலன் பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கீழக்கரை ஏர்வாடியில் இஸ்லாமிய பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியில் இஸ்லாமிய பொதுக்கூட்டம் 15.06.2010 அன்று மாலை 6 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியினை மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் துவங்கி வைத்தார். அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் “மரணத்தின் சிந்தனை” என்ற தலைப்பிலும் மாநில இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி நிழாமுதீன் அஸ்ரஃபி “ஓரிறைக் கொள்கை” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

கோவையில் சீரமைப்புக் கூட்டம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டக் கிளையின் சீரமைப்புக் கூட்டம் ஆனைமலை ஜும்ஆ பள்ளியில் 01.06.2010 அன்று மாநில செயலாளர் அபூ ஆஸியா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோனைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

மாவட்டத் தலைவராக ஷாநாவாஸ், மாவட்டச் செயலாளராக காளிகாபுரம் ஜெய்னுல் ஆபுதீன், பொருளாளராக யாஸீன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கீழக்கரையில் ஜும்ஆ உரை!

இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 18.06.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ பேரூரை  கே.ஈ.ஸி.டி தொழுகை கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது “சிறந்த கல்வி எது? அதன் அவசியம் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இராமநாதபுரம் சிக்கலில் பொதுக்கூட்டம்!

நேற்று 26.06.2010 அன்று இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பண்ரூட்டி நகராட்சிக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் அஹ்லெ ஹதீஸ் பள்ளிவாசல் இடத்தை அபகரித்த பண்ரூட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கண்டன உரையை மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் மற்றும் யூனுஸ் ஆற்றினர்.

INTJ திரட்டி

Syndicate content