- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இரத்ததான சேவைக்கு விருது!
நலவாழ்வுச் செய்திகள்
மழைக்கால நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் வாந்தி, வயிற்றுப்-போக்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:
* குடிநீரை வடிகட்டி, கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும்.
* உணவு உண்ணும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.
மதரஸாவில் பயிலும் ஹிந்து மாணவர்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்து மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரஸாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரஸாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
லீக் ஆனாது லிபாரன் அறிக்கை மட்டும் அல்ல இந்துத்துவாவும் தான்
அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்....
நானூற்றி ஐம்பது ஆண்டுகால வரலாற்று சின்னமாக கம்பீரமாக காட்சிதந்த இறையில்லமாம் பாபர் மஸ்ஜித், சட்டத்தை பாதுகாக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சட்டமன்றத்தின் முதல்வரான கல்யான் சிங் எனும் இந்துத்துவா அரசின் ஒத்துழைப்போடு, அப்போது இருந்த நடுவண் (காங்கிரஸ்) அரசின் கண்டு கொள்ளாமை உதவியோடு உலகம் சாட்சியாக பட்டப்பகலில் அத்வானி-முரளிமனோகர் ஜோஷி-உமாபாரதி போன்றவர்களின் உத்தரவின் பேரில் இந்துத்துவா பயங்கரவாதிகள் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கினர்.
கீழக்கரையில் தர்பியா நிகழ்ச்சி
நவம்பர் 14ஆம் தேதி கீழக்கரையில் தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாம் கீழக்கரையை அடுத்துள்ள காஞ்சிரங்குடியிலுள்ள இம்பலா ஹுஸைன் தோட்டத்தில் நடைபெற்றது.
இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்த முகாமை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் துவக்கி வைத்தார். முதல் அமர்வில் அப்துர் ரஹ்மான் அவர்கள் தியாகம் என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் காஞ்சி ஜாஹிர் ஹுஸைன் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற தலைப்பிலும் அருமையான கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
எர்ணாகுளத்தில் மருத்துவச் சேவைகள்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பஷீர் அஹமது தலைமையில் இயங்கிவரும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தைப் போலவே மருத்துவச் சேவைகளை மிகுந்த ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுட னும் செய்து வருகிறது.
பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காகவும், இரத்த தானம் வேண்டியும் எர்ணாகுளத்திலுள்ள பிரபல நவீன மருத்துவமனையான மாதா அமிர்ந்தானந்தமயி மருத்து வமனைக்கு (ஏ.எம்.ஐ.எஸ்.ஆர்.) வரும் நோயாளிகளுக்கு இரத்ததானம் ஏற்பாடு செய்வது முதல் அத்துனை மருத்தவ உதவிகளையும் ஜமாஅத் செய்து வருகிறது.
மதுரையில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 15-11-09 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது.
மக்ஃரீப் முதல் இஷா வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அழைப்பாளர் ஷம்ஸுத்தீன் இஸ்திகாமத் (உறுதியான நம்பிக்கை) என்ற தலைப்பில் மிகச் சிறப்பான விளக்கங்களை அளித்தார். அவரது உரை ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு நல்லதொரு புத்துணர்ச்சியை அளித்தது. மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
-------------------------------------------------------------------------------
தேனி மாவட்டத்தில் தர்பியா முகாம்
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரம் சார்பாக கடந்த 13-11-09 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த தர்பியா முகாமில் ""இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி'' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளை அவர் நடத்தினார்.
மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் உட்பட மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெருநாள் தொழுகை மற்றும் குர்பான் விநியோகம்
கீழக்கரை:
கீழக்கரையில் நபிவழி பெருநாள் தொழுகை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது. அதையடுத்து குர்பான் பிராணிகள் அறுக்கப்பட்டு அதன் இறைச்சி விநியோகம் வழங்கப்பட்டது.
கே.ஈ.சி.டி திடலில் காலை 7.30 மணிக்கு மவ்லவி நிழாமுதீன் அஷ்ரஃபி பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேரூரை நடத்தினார். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்களும், ஆண்களை விட அதிக அளவில் பெண்களும் கலந்து கொண்டனர்.


