- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
காஸா – இஸ்லாமியப் புனிதத் தலமான ஜெரூசலத்தில் ஸியோனிஸ சதித்திட்டங்களை முறியடித்து, அங்குள்ள மண்ணின் மைந்தர்களின் இருப்பை உறுதிப்படுத்துமுகமாக பெருமளவு நிதியுதவிகளை வழங்க முன்வருமாறு அரபு-இஸ்லாமிய நாடுகளை நோக்கி, முற்றுகைக்கு எதிரான மக்கள்சபைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜமால் அல் குத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.12.2009) ஜெரூசலத்துக்கு ஆதரவளிக்குமுகமாக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தீவிர ஸியோனிஸமயமாக்கல் திட்டத்தின் மிகப் பிரதான இலக்காகப் புனித ஜெரூசல நகரம் அமைந்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.
அந்த இலக்கினை அடைவதற்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை எந்த எல்லைக்கும் போகத் தயங்காது என்று அவர் அறிவுறுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸியோனிஸ அத்துமீறல் ஆக்கிரமிப்பிலிருந்து ஜெரூசலத்தைப் பாதுகாப்பதற்காய் அரபு, இஸ்லாமிய, சர்வதேச மட்டத்தில் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினார்.
ஜமால் அல் குத்ரி அவர்கள் ஜெரூசலத்தையும் மஸ்ஜித் அல் அக்ஸாவையும் ஸியோனிஸமயமாக்கலில் இருந்து பாதுகாக்குமுகமாக பல்வேறு அமைதிப் பேரணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC


