- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இறையருளால் நம் தலைமையகத்தில் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அவ்வரிசையில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா மற்றும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர் காதர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டர்கள்.

அவ்வாறே இன்று (08.09.2010) சோஸியல் டெமக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் முபாரக், மற்றும் விடுதலை சிறுத்தைகளின் பொருளாளர் முஹம்மது யூஸுஃப் ஆகியோர் வருகை தந்தனர்.
அவர்களை மாநிலத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இரு தலைவர்களும் சமுதாய சிந்தனைகளை வழங்கினர். அதன் பிறகு நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அன்புள்ள இந்திய தவ்ஹீது ஜமாஅத் இணையதள நிறுவனர் மற்றும் ஏனைய சகோதரர்களான இணையதள பார்வையாளர் அணைவரின் கவனத்திற்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது.
இப்பொழுதெல்லாம் நோன்பு திறக்கும் விருந்துக்கள் அதாவது இப்தார் நிகழ்ச்சி எல்லாம் அரசியலாகி விட்டது என்பதை நினைக்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. காரணம்: இந்த இப்தார் நிகழ்ச்சியில் பிரசமுதாய அரசியல் தலைவர்களும், மற்றும் அரசியல் சார்ந்தவர்களும் கலந்து கொள்வது சகஜமாகி விட்டது. நமது உயிரிலும் மேலான நபி முஹம்மது ரசூலுல்லாஹீ அவர்கள் காட்டித் தந்த தவ்ஹீத், சில தரிகெட்டவர்கள் கையில் சிக்கிக் கொண்டு அரசியல் சாயம் பூசப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதையும் உங்கள் இணையதளத்தில் போட்டு இருக்கிறீர்கள்.
இன்று விடுதலை சிறுத்தை பொருளாளர், அடுத்து விடுதலை சிறுத்தை தலைவர், அதற்கடுத்து ராமகோபாலன், இப்படியே போய்க்கொண்டு கடைசியில் "எல்லோரும் கொண்டாடுவோம்" இப்தார் நிகழ்ச்சியை என்று போய்விடுவீர்கள். பெயர் அளவில் தவ்ஹீது என்று வைத்து விட்டு அந்த தவ்ஹீதிற்கு முரணானதை செய்தது விட வேண்டாம். பிழைக்க எத்தனையோ வழி இருக்கிறது.
அதை கையில் எடுத்து, தீனை இதயத்தில் வைத்து இஸ்லாத்தை போற்றுங்கள். உத்தமம் பேசி ஊர் வாயை மூடவேண்டாம். உண்மையைச் சொல்லி நன்மையை ஏவுங்கள். S.L.நசீருதீன்
வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்பிற்குரிய சகோதரர் கீழக்கரை நசீருதீன் அவர்களே, கண்ணியமாக எங்களுக்கு கடிதம் எழுதியமைக்கு முதலில்மிக்க நன்றி.
எங்களிடம் குறை இருந்தால் அதை முறையாக சுட்டிக்காட்டினால் இறைவனுக்காக எந்த மறுப்பும் இல்லாமல் அதை ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வோம். ஆனால் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு எதையாவது தயவு செய்து சொல்லாதீர்கள்.
அரசியல் நடத்துவது யார்? பழுத்த அரசியல்வாதிகளே தாங்கள் அகராதி கேட்கும் அளவிற்கு அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தும் அண்ணின் தங்க தம்பியான நீங்கள் அவரைப் போன்று அவசரப்பட்டு இஃப்தார் நிகழ்ச்சியினை அரசியலாக்காதீர்கள் என மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இஃப்தார் விருந்து நடத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதா? அதில் ஏன் மாற்று மத சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கக்கூடாதா? அல்லாஹுடைய தூதர் விருந்து ஏற்பாடு செய்து குரைஷி மக்களை அழைத்து, விருந்து கொடுத்து இஸ்லாத்தை சொல்லவில்லையா?
அவ்வாறான ஒரு வழிமுறையில் ராம கோபாலனை அழைத்து நோன்பு கஞ்சியுடன், ஏகத்துவத்தையும் அவருக்கு ஊட்டுவது தவறானாதா? அதில் அவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினால், அது இறைவனுக்கு விருப்பமான செயலாகாதா? அது அரசியலா? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள். எங்கள் மீது இருக்கும் வெறுப்பால் எதையாவது சொல்லி உமிழாதீர்கள். அவருடன் எங்களது தலைவர் பாக்கர் ஒரு டிவி நிகழ்ச்சியில் சந்தித்தப் பொழுது இறைவனின் இறுதி வேதத்தை வழங்கினார். அதை நான் எப்படி படிப்பது என ராம கோபாலன் கேட்டார்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் அல்லாஹ் எங்களையும் ராம கோபாலனையும் உயிருடன் இறைவன் வைத்திருந்தால், இஃப்தாருக்கு நாங்கள் அவரை அழைப்போம். இந்த மார்க்கத்தை அவருக்கு எடுத்துச் சொல்வோம். நம் சமுதாயத்திற்காக பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து தோளோடு தோள் நிற்கும் ஒரு நல்ல சகோதரன் திருமாவளவனையும் அழைப்போம். அவருக்கும் இஸ்லாமிய அறிவை ஊட்டுவோம். அல்லாஹ் நாடுவான் மிக விரைவில்... டாக்டர் அப்துல்லாஹ் போல் அவரும் ஒரு அப்துர் ரஹ்மானாக மாறுவார்.
சகோதரர் நசீருதீன், விடுதலை சிறுத்தைகள் பொருளாளர் என்றதும், அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என தாங்கள் கருதி விட்டீர்கள். இல்லை சகோதரரே! அவர் ஒரு முஸ்லிம். அவரது பெயர் முஹம்மது யூஸுஃப். அவர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பாவமா? அரசியலா? விடுதலை சிறுத்தைக்கள் பெருளாளரை அழைத்ததால் நாங்கள் என்ன அரசியலை நடத்தி விட்டோம்?
தவ்ஹீதை கொண்டு பிழைப்பு நடத்துவது யார்? ஊராறிந்த விஷயம். இல்லை இல்லை உலகம் அறிந்த விஷயம். மஞ்சள் பையுடன் வந்து பல தொழில் துறைகளுக்கு முதலாளியாக இருப்பது யார்? பேப்பர் முதல் மிட்டாய் வரை தவ்ஹீதை கொண்டும், தவ்ஹீத்வாதியை கொண்டும் பிழைப்பு நடத்திக் கொண்டு இருப்பது யார் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை சகோதரரே.
இறுதியாக தாங்கள் சொன்ன விஷயத்தை கொண்டே முடிக்கின்றோம். தீனை இதயத்தில் வைத்து இஸ்லாத்தை போற்றுங்கள். உத்தமம் பேசி ஊர் வாயை மூடவேண்டாம். உண்மையைச் சொல்லி நன்மையை ஏவுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கும் அருள் செய்வானாக! ஆமீன்.
வஸ்ஸலாம்.
-வெப் மாஸ்டர்.