INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

டிஸம்பர் 6 குறித்த பத்திரிக்கைச் செய்திகள்

------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான கல்ப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி.

 

Gulf News

 

 

-----------------------------------------------------------------------------------------------

தமிழ் ஓசை நாளிதழ்

------------------------------------------------------------------------------------------------ 

----------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------

தினத்தந்தி நாளிதழ்

 ----------------------------------------------------------------------------------------------------------------------

 

தினமலர் நாளிதழ்

 

 ---------

-------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டு தினசரி செய்திகள் என்ற தளத்திலிருந்து

ஸ்தம்பித்தது சென்னை !

 
பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற நுர்றுக்கனக்கனோர்கைது செய்யப்பட்டனர்

--------------------------------------------------------------------------------------------------------

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

சென்னையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

--------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : மாலைமலர்

------------------------------------------------------------------------------------------------

 

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

இந்நேரம் என்ற செய்தித்தளத்திலிருந்து...

 

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதியைத் திரும்ப ஒப்படைக்க கோரியும், லிபரான் கமிசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6 தேதி நாடெங்கும் பாபர் மசூதியைத் திரும்பக் கட்டக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று தமிழகத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தின. மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டு முன்பாக இந்திய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது நூற்றுக்கணக்கில் பெண்களும் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இப்போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை பல முன்னணி தொலைக்காட்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்தது. 

சென்னை மட்டுமின்றி ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடி கண்டலூர் உட்பட  மாநிலத்தின் இதர பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இப்போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------------------

தட்ஸ்தமிழ்.காம் என்ற தமிழ் தளத்திலிருந்து

 சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயற்சி...

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பாஸ்கர் தென் சென்னை மாவட்ட செயலாளர் யூனுஸ், வட சென்னை மாவட்ட செயலாளர் ஹனீபா முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நுங்கம் பாக்கம் சாலை கிருஷ்ணம்மாள் தெரு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சம்பவத்துக்கு காரணமான இந்துத்துவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.

லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுங்கம்பாக்கம் பைகிராப்ட் கார்டன் ரோட்டில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 150 பெண்கள் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தெனாலி என்ற தமிழ் தளத்திலிருந்து

சென்னை: லிபரான் கமிஷ்ன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட 68பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிடச்சென்ற தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

அயோதியில் பாபர் மசூதி இருந்த இடத்தை ராமர் பிறந்த இடம் என்று கூறி இந்துத்துவ அமைப்புகள் 17ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் -6 ஆம்  இடித்து தரைமட்டமாக்கினர்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக  மத்திய அரசு அமைத்த லிபரான் விசாரணை கமிஷ்ன் தனது தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை அண்மையில் மக்களவையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் லிபரான் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட 68 பேரை கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள உள்ளதுறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னையில் ப.சிதம்பரம் வீட்டின் அருகில் திரண்ட 80 பெண்கள் உள்ளிட்ட 250பேரை சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

 

INTJ திரட்டி

Syndicate content