INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

திருவிடைச்சேரியில் கலவரம் இருவர் மரணம், 4 பேர் படுகாயம்!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த 05.09.2010 அன்று இரவு தொழுகை (தராவீஹ்) சம்பந்தமாக ஏற்பட்ட வாய் தகராறு, கை கலப்பாகி துப்பாக்கி சூட்டில் முடிந்தது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே மவ்தானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்
 
அருளும், கருணையும், கண்ணியமும் தவழும் இந்த புனித ரமதான் மாதத்தில், ஷைத்தான் விலங்கிடப்பட்டுள்ளான். சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டுள்ளது என நபிமொழிகளால் நற்செய்தி சொல்லப்பட்ட இந்த மாதத்தில் ஆத்திரத்தில் அறிவிழந்த காரணத்தால் அநியாயமாக மனித உயிர்கள் மாய்ந்து போனது. 
 
மார்க்க அடிப்படையை பின்பற்றுவதில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும், இவ்வூர் ஜமாஅத்தினருக்கும் பிரச்னைகள் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தன. இவ்வருடமும் அது தொடரவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் வீட்டில் தொழுகை நடத்தி வந்துள்ளனர். இதனால்  பக்கத்து வீட்டாரான ஹிதாயதுல்லாஹ்வுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் அடிக்கடி பிரச்னையை ஏற்பட்டு வந்துள்ளது.
 
சம்பவம் நடைபெற்ற அன்று தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்தைச் சேர்ந்த குத்புதீனோடு (இவரை தற்பொழுது ததஜ மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் இவருக்கும், ததஜவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்.) ஜபருல்லாஹ் தகராறு ஏற்பட்டுள்ளது.  வாய் தகராறு கை கலப்பாகி போனது. 
 
இதை தனது உறவினரான திருவிடை மருதூர் அருகில் உள்ள குறிச்சிமலையைச் சேர்ந்த ஹாஜி முஹம்மதிடம் குத்புதீன் போய் சொல்ல, அவர் 2 அம்பாசெட்டர் கார் மற்றும் ஒரு குவாலிஸ் வண்டியில் சுமார் 15 பேர்களுடன் இரண்டு துப்பாக்கியுடன்  திருவிடச்சேரிக்கு வந்தார்.
 
தன் சகாக்களுடன் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி முத்தவல்லியிடம் போய், தன் உறவினர் குத்புதீனை இப்போது அடியுங்கள் பார்ப்போம் என தகராறு குறித்து பேசும் பொழுது, திடீர் சப்த்தால் குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்தவர்கள், மைக்கில் கலவரம் நடக்கிறது வாருங்கள் என ஊர் மக்களை அழைத்து, ஊர் பரபரப்புடன் திரண்டது. இதனால் பதற்றமான ஹாஜி முஹம்மது,  தன் கையில் வைத்திருந்த துப்பாகியால் எதிரில் நின்ற இமாம் முஹம்மது இஸ்மாயில், அஜீஸ் முஹம்மது, காஜா முஹைதீன் மற்றும் 3 இந்து சகோதரர்களையும் சுட்டார். இதில் முஹம்மது இஸ்மாயில் மற்றும் அஜீஸ் முஹம்மது அங்கே சுருண்டு விழுந்து மவ்தானார்கள். காஜா முஹைதீன் சுயநினைவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 3 மாற்று மத சகோதரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கண நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மக்கள் பெரும் பீதியில் சிதறி ஓடினர்.
 
செய்தி காட்டுதீ போல் பரவியது. போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் அவ்வூர் வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினார். ஆத்திரத்தில் அறிவை இழந்த ஹாஜி முஹம்மது தலைமறைவாகிய காரணத்தால், அவரது தம்பியை காவல்துறை பிடித்து விசாரித்தது. அவரது வீட்டில் துப்பாக்கியை கைப்பற்றியது. அதன் பிறகு சிதம்பரம் கோர்ட்டில் சரணடைந்தார்.
 
வழமைப் போல் ததஜ, இச்சம்பவத்தில் முதன்மை கதாநாயர்கள் ஹாஜி முஹம்மது மற்றும் குத்புதீனுக்கும் ததஜவுக்கும் எள்ளின் அளவோ, எள்ளின் முனையளவோ சம்பந்தம் இல்லை என சொல்லி விட்டது. சம்பவத்துடன் ததஜவை இணைப்பது திட்டமிட்ட செயல் என சொல்லி விட்டது.
 
ஆனால் நாம் அறிந்த வரை திருவிடைச் சேரியைச் சேர்ந்த குத்புதீன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்தான் என்கின்றனர்.
 
என்னத்தான் ஆத்திரம் வந்தாலும் துப்பாக்கியை எடுத்து கொக்கு, குருவியை சுடுவது போல சுடுவது?
 
யா! அல்லாஹ்! நிதானமாக சிந்திக்கும் ஆற்றலையும்,  பொறுமையும் வழங்குவாயாக!
 
-இப்னு அப்துல் காதிர்.

INTJ திரட்டி

Syndicate content