INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

முன் அறிவிப்பின்றி முதல்வர் வீடு முற்றுகை!

முஸ்லிம்கள் அதிகம் வாழும் திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளானர். அதிலும் இந்த ரமதான் மாதம் நோன்பு நேரங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிலும் மின்தடை ஏற்பட்டு மக்களுக்கு பெரும் தொந்தரவுக்கு உள்ளாயினர். குறிப்பாக ரமதானின் கடைசி பத்து இரவுகளில் இரவெல்லாம் விழித்திருந்து வணக்க வழிபாடுகள் நடத்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டத்தால் மக்களுக்கு கடும் எரிச்சலை  தந்தது.

இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் பலனின்றி போனது.. அவர்களின் பொறுப்பற்ற பதிலில் வெறுப்படைந்த மக்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் பயானில் இருந்த நிர்வாகிகளிடம் முறையிட, அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று 'இரவு மின்சாரம் வரவில்லையெனில் நாங்கள் மறியல் செய்வோம்' என்று கூற அவர்களும் 'செய்யுங்கள் எங்களுக்கு கவலையில்லை' என திமிர்தனமாக பதில் அளித்தும் மக்கள் அனைவரும் வேறு வழியின்றி கொட்டும் மழையில் ஊர்வலமாக கோபாலபுரம் சென்றனர்.

விஷயமறிந்த இதஜ மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடத்தில் 'முன்னறிவிப்பின்றி முதல்வர் வீட்டை முற்றுகையிடுவது முறையல்ல' என எடுத்து கூறி மக்களை சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையில் மீடியாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் செய்தி கிடைத்து முதல்வர் வீடு இருக்கும் கோபாலபுரம் பகுதி நள்ளிரவு இரண்டு மணிக்கு பரபரத்தது! கொட்டும் மழையில் உறுதியாக நின்ற முஸ்லிம்களிடத்தில் பேசுமாறு அதிகாரிகள் பாக்கரிடம் பேச உடனடியாக மின்சாரம் வர ஏற்பாடு செய்கிறோம் என அதிகாரிகள் கூறினார்.

மீடியாக்கள் பாக்கரை சூழ்ந்து கொள்ள பாக்கர் அளித்த பெட்டியில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை ஒரு பிடி பிடித்தார். இரண்டு காவல் நிலையங்களை தாண்டி முதல்வர் வீடு வரை மக்களை வரவைத்த அதிகாரிகளின் அலட்சியத்தையும், முதவர் வீடு பாதுகாப்பு குறை பாட்டை இச்சம்பவம் எடுத்து காட்டுவதை கூறி நிலைமையை சாதுர்யமாக கையாண்டார்.

சற்று நேரத்தில் பகுதியில் மின்சாரம் பழுது சரி செய்யப்பட்டு சீரடைந்ததை அடுத்து மக்கள் கலைந்தனர்.இப்படியாக நள்ளிரவு முற்றுகை நடந்தேறியது.

INTJ திரட்டி

Syndicate content