- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
450 ஆண்டுகால இறையில்லம் பாபரி மஸ்ஜிதை திரும்ப பெறவும், அதை இடித்த காவி கும்பல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டை ஆண்களும், பெண்களும் குழந்தைகளுமாக ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.
இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க முடிவு செய்ததை அடுத்து, தமுமுக, மமக, எம்.என்.பி, ஜாக், ஐமுமுக உட்பட அனைத்து சமுதாய அமைப்புகளும் (ததஜா தவிர) இதஜா சகோதரர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என தமுமுக உட்பட மற்ற அமைப்பு சகோதரர்கள் சொன்னதின் காரணமாக, கைது செய்து ரிமாண்டில் அடைக்க இருந்த அரசு, ரிமாண்டை வாபஸ் வாங்கி விட்டு அத்தனை சகோதரர்களையும் விடுதலை செய்து விட்டது.
ஆரம்பத்தில் பெண்களையும் குழந்தைகளையும் வீட்டுக்கு செல்லுங்கள், ஆண்களை மட்டும் ரிமாண்டு செய்ய போகிறோம் என காவல்துறை சொன்னதும், விடுதலை செய்தால் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்யுங்கள். இல்லாவிட்டால் எங்களையும் ரிமாண்டில் அடையுங்கள் என நம் பெண்கள் தைரியமாக சொல்லி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹூடைய பள்ளியை மீட்க குழந்தைகளுடன் சிறை செல்லவும் தயார் என வெளிவந்த நம் சகோதரிகளுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிகட்டும். சமுதாய போராட்டத்திலும் ஆண்களுக்கு சமமாக நாங்களும் இருக்கிறோம் என நிருபித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதஜா சகோதரர்களை ரிமாண்டில் அடைக்க போகிறார்கள் என கேள்விப்பட்டு அதற்கு எதிராக போராட்டம் நடத்த வந்த தமுமுக உட்பட அனைத்து அமைப்பிற்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தது.
குறிப்பாக இதஜா சகோதரர்களை விடுதலை செய்வதற்கு முழு முயற்சி செய்த தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி இருவருக்கும் நம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றியினை தெரிவித்தார். இது சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்.


