INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

'தூங்கும்' எம்.பி. நிதி; நமது எம்.பி.க்களின் நிலை!

பாராளுமன்றத் தேர்தலில் நமது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது, தொகுதிக்கு தேவையான விஷயங்களை பாராளுமன்றத்தில் முழங்கி, நிதியை பெற்று நாங்கள் தொகுதியின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்றெல்லாம் கர்ஜிப்பதை நாம் அறிவோம்.

ஆனால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றபின் பேசுவதற்கு தமது கட்சி கொறடாவிடம் கோரிக்கை வைக்காத எம்.பி.க்களையும் சமீபத்தில் நாம் செய்தியாக கண்டோம். சரிதொகுதி நிலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசாவிட்டால் கூட பரவாயில்லை; தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசு ஒதுக்கும் தொகையையாவது இவர்கள் ஒழுங்காக நலப்பணிக்கு செலவிட்டார்களா என்றால் பெரும்பாலோர் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக இரண்டு கோடியை அரசு ஒதுக்கி வருகிறது. இந்த நிதி எம்.பி.யின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அத்வானி, லாலுபிரசாத் யாதவ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 130 எம்.பி.க்கள் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. அப்படியாயின் இவர்கள் தொகுதியின் நிலையை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்..? இவர்களுக்கு பாராளுமன்றம் செல்வதே ஒரு சுமையாக தெரிகிறது. அப்படியே சென்றாலும் அங்கு மக்கள் பிரச்சினையை பேசுவது பாரமாக தெரிகிறது. இயன்றவரை ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி அவையை நடக்கவிடாமல் செய்வது மட்டும் இவர்களுக்கு விருப்பமானதாக உள்ளது. பரிதாபத்திற்குரியவர்கள் வாக்களித்த ஏமாளிகளான பொதுமக்கள்தான்! [இவர்களை எப்படி ஏமாளிகள் என்று சொல்கிறீர்கள்..? அவர்கள்தான் வாக்குக்கு பகரமாக 'கவரும்' கவர்ச்சியான பொருட்களும் பெற்றுக்கொண்டுதானே வாக்களித்தார்கள் என்று ஒரு அசரீரியும் எமது காதில் விழுகிறது].

சரி!இருப்பினும் ஒரு மகிழ்ச்சியான செய்தி; எம்.பி. நிதியை பயன்படுத்தியதில், பாரளுமன்றத்தில் பார்க்கமுடியவில்லை என்று பரவலாக பேசப்பட்ட மு.க. அழகிரி அவர்கள் முதலிடத்தில் இருக்கிறார் என்பதுதான். இதிலாவது தமிழகமும், தமிழனும் முன்னணியில் இருப்பதில் எமக்கு ஒரு ஒரு அற்ப சந்தோஷமே!

வாழ்க ஜனநாயகம்[!]

ஆக்கம் : முகவை அப்பாஸ்.

INTJ திரட்டி

Syndicate content