- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நான்கு ஆண்டு படிப்பாக பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ.,பி.எட்., ஆகியவை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் கூறியது: பி.எட்., மாணவர்களின் பாடத்திட்டத்தில் கற்பித்தல் வகையும் மதிப்பீட்டு நுணுக்கமும் என்ற புதிய பாடம் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த புதிய பாடம் கலை, அறிவியல் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் சுகாதாரம் மற்றும் யோகா பற்றிய பாடங்களும் சேர்க்கப்படும். இப்போது வழங்கப்படும் ஓராண்டு பி.எட். படிப்பு எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இவற்றில் உள்ள குறைபாடுகளையெல்லாம் நீக்கி, அவற்றை மேலும் வலுப்படுத்தி, 4 ஆண்டு-களைக் கொண்ட பி.எட்., படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இவை பி.எஸ்சி.,-பி.எட்., பி.ஏ.,பி.எட், என 2 வகைகளில் வழங்கப்படும். இவற்றில் 25 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். இந்த 4 வருட படிப்பில் தமிழ், முதன்மைப் பாடங்கள், துணைப் பாடங்கள், கல்வியியல் பாடங்கள் உண்டு. தவிர, ஆண்டுக்கு 20 நாள்கள் செய்முறை பயிற்சியும் உண்டு.
இந்த 4 ஆண்டு படிப்புகளை வழங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் கொண்ட கல்லூரிகளுக்கு, 4 ஆண்டு பி.எட். படிப்புகளை கற்பிக்க அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில் இப்போது வழங்கப்படும் ஓராண்டு பி.எட். படிப்பும் தொடரும் என்றார் அவர்.
நன்றி : விடுதலை நாளிதழ்


