INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்ற சிறைத்துறை அமைச்சர் உறுதி!!

கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அல் உம்மா தலைவர் அன்ஸாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதை வேலூர் நாடாளுமன்ற  உறுப்பினர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.

இவருடைய மாற்றத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முயற்சி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவை சிறையிலிருந்து அன்ஸாரி மாற்றலை தொடர்ந்து அச்சிறையிலுள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனால் அக்குடும்பத்தாரின் மிக கவலையுடன் வைத்த கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஷியாம் சுந்தரை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து, இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார். தற்பொழுது ஷியாம் சுந்தர் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்)

இதனால் சிறைவாசிகளின் குடும்பங்கள் நிம்மதியடைந்துள்ளன. இம்முயற்சிக்கு ஏற்பாடு செய்த முஸ்லீக்னை சிறைவாசிகள் குடும்பத்தாருடன் சமுதாயம் பாராட்டுகிறது.

-அபூ அவ்ன்.

INTJ திரட்டி

Syndicate content