- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அல்ஹம்துலில்லாஹ்..தாங்கள் பாபர் மஸ்ஜிதை மீட்க நடத்திய ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் அனைத்தும் முக்கியம் வாய்ந்தது. எனது கேள்வி என்னவென்றால் தனி,தனி இயக்கமாக நடத்தும் இந்த போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் இனியாவது அனைவரும் ஒன்று திரண்டு கட்சி, இயக்கம் வேறுபாடின்றி ஒன்றாக போராடினால் என்ன? அதற்க்கு நமது INTJ முன்வர வேண்டும்.
-அப்துல் வஹ்ஹாப்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் அப்துல் வஹ்ஹாப்,
அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்வான். நாமும் சமுதாயம் ஒன்றிணைந்து ஒரே அணியாக நிற்க வேண்டும் என்ற முயற்சியினைதான் செய்து வருகிறோம்.
கடந்த ஆட்சியில் கருணாநிதி அரசு கொண்டு வந்த திருமணப் பதிவு சட்டத்தை மாற்ற அனைத்து அமைப்புகளை நாம்தான் ஒன்று கூட்டி போராடினோம். அவ்வாறே, காதியானிகள் பிரச்னையில் சமுதாயத்தின் அங்கமாக நாமும் மேலப்பாளையத்திற்கு சென்று அங்கு நமது கருத்துக்களை பதிந்தோம்.
முடிந்தவரை பொது பிரச்னைகளிலாவது ஒன்று இணைந்து போராட வேண்டும் என ஆவல் கொண்டு உள்ளோம். துஆச் செய்யுங்கள்.
வஸ்ஸலாம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோ!சகோ.பி.ஜே அன்றும் இன்றும் என்று தொடர்ந்து கட்டுரைகளை எழுதும் நீங்கள் பிறை விசயத்தில் நீங்கள் அதாவது இதஜ இன்றைக்கு என்ன நிலையில் இருகிறிர்கள் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ஏன் என்றால் அன்றைக்கு (ததஜ வில் இருந்து பிரிந்த பின்னர்)மகாராஷ்டிரா மாநிலம் மலேய்கனில் பிறை தெரிந்ததற்கு (தமிழகத்தில் தெரியாத நிலையில்)மறுநாள் பக்ரித் என்று அறிவித்தது மட்டும் இல்லாமல் அதனை விளக்கும் விதமாக வீடியோ ஒன்றும் வின் டிவி இல் விளம்பரம் செய்தீர்கள் ஆனால் தற்போது அதனை பின் பற்றாமல் தமிழக பிறையை பின் பற்றிய நோக்கம் என்ன (கேரளா,ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் தமிழகத்தினை விட ஒரு நாள் முன்பாக நோன்பினையும் நோற்றன்னர்)இப்போது நீங்கள் (இதஜ வினர்)அடிபடையாக கொண்டு பிறைகளை பின்பற்றி வருகிறீர்கள் விளக்கம் தரவும்.
S.Nabil Ahamed.B.C.A.,P.G.Diplomo(Vis.com)
contact num:+91-9944471923
வ அலைக்கும் வஸ்ஸலாம்
அன்புக்குரிய சகோதரர் நபீல் அஹ்மது, சகோதரர் பிஜெயுடன் நாம் அவருடன் இருந்த நாளில், தமிழக காஜி அறிவிப்பு செய்யும் பிறை மிகச் சரியானதுதான். அதை பின்பற்றுவது தவறல்ல. தமிழக காஜியின் வேலையே அதுதான் என நமக்கு சொல்லி தந்தாரே, அதைதான் நாம் பின்பற்றி வருகிறோம்.
சென்ற வருடம் தமிழக காஜியின் அறிவிப்பைத்தான் நாம் எடுத்தோம். அவர் அறிவிப்பில் என்ன தவறு என்றுதான் கேட்டோம்? நாங்கள் இந்திய பிறையை ஏற்றுக் கொண்டுள்ளோம் என சொல்லவில்லை.
மாறாக நாம் அவர்களிடம் (பிஜெ மற்றும் ததஜ) உங்கள் அமைப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப, நேற்று ஊர் பிறை, மண்டல பிறை, மாநில பிறை என மாற்றி வந்த நீங்கள் நாளை உங்கள் அமைப்பு இந்திய முழுவதும் வளர்ந்து விட்டால், இந்திய பிறையை ஏற்பீர்களா? என்றுதான் கேட்டோமே தவிர, நாங்கள் இந்திய பிறையை ஏற்றுக் கொண்டுள்ளோம் என சொல்வில்லை.
தாங்கள் சென்ற வருடம் நாங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.
வஸ்ஸலாம்.
இதஜவின் தேர்தல் முடிவில் 100 சதவீதம் சமுதாய நலன் இருக்கும் இன்ஷா அல்லாஹ்!
கருணாநிதி இடஒதுக்கீட்டை 3.5% லிருந்து 5% ஆக உயர்த்துவதாக நாடகமாடி அதைவைத்து முஸ்லிம்களின் வாக்கை கவர நினைக்கின்றார். அப்படியே மாற்றி அமைத்தாலும் அதை நாம் வரவேற்க வேண்டுமே தவிர மீண்டும் கருணாநிதியை நம் சகோதரனை போல நினைத்து முஸ்லிம் சமுதாயம் வாக்களிக்க வேண்டுமா?
பாவம் கருணாநிதிக்கு தோல்வி பயம்வந்துவிட்டது போல அதான் முஸ்லிகளை தக்கவைத்து கொள்ள இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றார். அப்படி மாற்றி அமைத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரும் தேர்தலில் கருணாநிதிக்கு ஆதரவளிக்குமா?
முத்துப்பேட்டை முகைதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடன் சகோதரர் முத்துப்பேட்டை முகைதீன் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
சகோதரர் அவர்களே! நம் சமுதாயத்திற்கு நன்மையை செய்யத்தான் நாம் அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறோமே தவிர, நாம் சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல.
முதல்வர் நேற்று (30.01.2011) அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றி இடஓதுக்கீட்டின் அளவை மாற்றினால் நிச்சயம் அவருக்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமைதானே. அதுதானே நியாயமும் கூட.
எல்லா அரசியல்கட்சியுமே தான், தான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் தேதி வெளியான பிறகு இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்தின் நலன் நாடி நல்ல முடிவை அறிவிக்கும். அதில் நிச்சயமாக சமுதாயம் நலன்தான் 100 சதவீதமும் இருக்கும்.
வஸ்ஸலாம்.
கிப்லாவின் திசை காலை காட்டியவாறு உறங்கவதற்கு மார்க்கத்தில் தடை உண்டா? தயவு செய்து விளக்கம் தரவும்
ஸஃப்வான், இலங்கை, safwan.mansoor@yahoo.com
சகோதரர் ஸஃப்வான் அவர்களே!
தூங்கும் போது ஒரு குறிப்பிட்ட திசையில் கால்களை நீட்டக் கூடாது என்றோ, அல்லது நீட்ட வேண்டும் என்றோ அல்லாஹுடைய அருமை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு எந்த ஒன்றையும் கற்று தரவில்லை, அது குறித்து சட்டம் ஏற்றவும் வில்லை. நமக்கு உறங்க எந்த திசை வசதியாக இருக்கின்றதோ அந்த திசையை நோக்கி உறங்கிக் கொள்ள மார்க்கம் அனுமதி அளிக்கிறது.
உறங்கும் முறை குறித்துத்தான் நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர உறங்கும் திசை குறித்து சொல்லவில்லை. உறங்குபவர் உறங்கத் துவங்கும் போது வலப்புறமாக ஒரு சாய்த்து படுக்க வேண்டும் என்பதை மட்டும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது நாம் எந்த திசையில் படுத்தாலும் நமக்கு வலது புறம் எத்திசை வருகின்றதோ அதை நோக்கி நாம் திரும்பிப் படுக்க வேண்டும்.
247 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري
பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் “நபி’யை நான் நம்பினேன்.” என்று பிராத்தித்துக்கொள்! (இவ்வாறு நீ பிராத்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிராத்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!புகாரி (247)
626 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالْأُولَى مِنْ صَلَاةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ رواه البخاري
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள் :
ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(லி தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.புகாரி (626)
மேற்கு திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். கஅபதுல்லாஹ் மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர். இந்த நம்பிக்கை தவறானதாகும்.
கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக் கூடாது :
அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத் திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்.. தமது இடப் புறமோ தமது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். ஆதாரம்: புகாரி: 408
மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கவோ அல்லது பின்னோக்கக்கூடாது.
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரழி) அவர்களிடம், “மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார்(போலும்)” என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணை வைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.) அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், “ஆம் (உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும், கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் 437
இந்த விதிமுறைகளை மட்டும் தான் கிப்லா விஷயத்தில் மார்க்கம் கூறுகின்றது. கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்று மார்க்கச் சட்டம் இருக்குமேயானால் அது குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவ்வாறு கால் நீட்டக்கூடாது என்று எந்த ஆதாரமும் கூறவில்லை. எனவே கிப்லாவை நோக்கி கால் நீட்டுவது தவறு கிடையாது.



Post new comment