INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

உயிரினங்களை உண்ணும் அதிசய தாவரம்!

கடந்த 1800ஆம் ஆண்டுகளில் வெளி வந்த மனிதர்களை உண்ணும் மரம் என்ற ஆய்வறிக்கை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது அந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட கார்ல் லிசே ஜெர்மனிய ஆய்வாளர், அவர் தனது அறிக்கையில்  கூறுகையில் மடகஸ்கார் என்ற மாகாணத்தில் பெண் ஒருவர் மரத்தில் அருகே சென்று அதன் கனிகளை சுவைத்தபோது, மனித வாடையை உணர்ந்த மரம் அந்த பெண்ணை மரம் தன வசம் இழுத்துகொண்டதாக கூறினார.

100ஆண்டுகளுக்கு பிறகு, விஞ்ஞான எழுத்தாளர் ஒருவர் மனிதர்களை உண்ணும் மரம் ஏதும் இல்லை என்றும், மற்றும் கார்ல் லிசே என்ற பெயர் கொண்ட எவரும் மடகஸ்கார் மாகாணத்திற்கு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தி கார்ல் லிசேவின் ஆய்வுகள் பொய் என்ற நிரூபித்தார்.

தற்போது சமீபத்திய ஆய்வில், மனிதனை உட்கொள்ளும் மரம் ஏதும் இல்லாவிட்டாலும், அதற்கு கீழ் நிலையில் சிறிய பள்ளி, பூச்சி போன்ற உயிரினங்களை   உட்கொள்ளும் நேபென்தஸ் எனப்படும் தாவர இனம் ஒன்று கண்டுபிடிகபட்டுள்ளது, இந்த மரம் மடகாஸ்கர் மாகாணத்தில் உள்ள வெப்பம் நிறைந்த ஈரபதம் குறைவாக இருக்கும் இடத்தில இருப்பதாகவும் மேலும் இது இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற வணபகுதிகளிலும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிகிறார்கள்.

உயிரினங்களை உண்ணும் இந்த தாவரம் அதன் இலைகளின் மூலம் சுரக்கும் தார் போன்ற ஒரு திரவத்தை புனல் வடிவத்தில் இருக்கும் பூவின் உட்பகுதியில் சேர்த்து  வைத்து  அதோடு வேரிலிருந்து சுரக்கும் தண்ணீரையும் கலந்து ஒரு வித வாசனையை உருவாக்கி அந்த வாசனையின் மூலம் பள்ளி, பூச்சி, போன்ற உயிரினங்களை தன பால் வரவழைக்க செய்து பின்பு அவைகள் பூவில் உள்ள திரவத்தை சுவைக்கும் தருணத்தில் உளிழுது கொள்கிறது. பின்பு அந்த உயிரினங்கள் மூலம் கிடைக்கும் ஊடச்சதுகளை தன வசபடுதி தன்னை செழிப்பாகிகொள்கிறது.

நேபென்தஸ் எனப்படும் இந்த தாவர இனம் மனிதனை உள்வாங்கும் அளவுக்கு பெரிதாக இல்ல விட்டாலும் மனிதனை கொள்ளும் அளவுக்கு விச தன்மையை உள்ளடக்கியது என்று வியப்புடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

-அதிரை அப்துல் கரீம்.

 #

Alhamdulillah it's very good to see these kind of innovative news in communal sites. Pls concentrate much in these informations.

Jafarullah, Singapore

 
 #

The news about insects eating tree is amazing i am really proud to view these kind of science oriented news. Please adopt these kind of news in future to fetch the new viewers.

Sajahan Sri Lanka

உயிரனங்களை உண்ணும் மரம் என்ற செய்தி அதிசய மாக இருந்தது. உண்மையிலேயே இது போன்ற செய்திகளை படிப்பதற்கு பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து வருங்காலங்களில் இதுபோன்ற செய்திகளை புதிய பார்வையாளர்களுக்காக பதிவுச் செய்யவும்.

ஷாஜஹான், ஸ்ரீலங்கா.

 

 

INTJ திரட்டி

Syndicate content