INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

குஜராத்தில் போலி எண்கவுண்டர் அமைச்சர் தலைமறைவு!

காந்தி பிறந்த அகிம்சை மண்ணான குஜராத், கோட்சேயின் வாரிகள் ஆட்சிக்கு வந்தபின் 'ஹிம்சை' மண்ணாகிவிட்டது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் ரத்தத்தால் 'நிலமெல்லாம் ரத்தம்' என்று சொல்லும் நிலைதான் குஜராத்தில் உள்ளது. முஸ்லிம்களா அவர்கள் ஒன்று இன சுத்திகரிப்பு மூலம் ஒழிக்கப்படவேண்டும். அல்லது போலி என்கவுண்டர்கள் மூலம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மோடி ராஜ்யத்தின் தாரக மந்திரமாகும்.

கடந்த 2005 ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட சொரப்தீன் என்பவரின் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட பத்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சாட்சியாக இருந்த சொரப்தீனின் மனைவி கவ்சர் பீவியும் கடந்த ஜனவரி மாதம் திடீரென கொல்லப்பட்டார். இந்நிலையில், சொரப்தீனை 'போட்டுத் தள்ளுமாறு' குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறி அதுபற்றி அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகாத அமீத் ஷா வுக்கு இன்றுவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர் ஆஜராகாத பட்சத்தில் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே குஜராத் முஸ்லிம் இனசுத்திகரிப்பு கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் முன்பாக முதலமைச்சர் மோடி ஆஜரானதன் மூலம் குஜராத்தின் மானம் கப்பலேறியது. இப்போது அமைச்சர் ஒருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குஜராத்தில் நடைபெறுவது மக்களாட்சி அல்ல. மதவாத ஆட்சிதான் என்று படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் இதுபோன்ற வெற்று சம்மன்களும் விசாரணைகளும் இந்துத்துவாக்களை எந்த வகையிலும் மட்டுப்படுத்திவிடாது. மாறாக சட்டம் குற்றவாளிகளுக்கு தனது தண்டனையை விரைந்து வழங்குவதுதான் மனித உயிர்கள் 'போலி என்கவுண்டர்'களுக்கு பலியாகாமல் பாதுகாக்கும் என்பதை சட்டமும் நீதியும் உணர்ந்தால் சரி.

ஆக்கம் : முகவை அப்பாஸ், குவைத்.

INTJ திரட்டி

Syndicate content