இராமநாதபுரம் மாவட்டப் பொதுக்குழு:
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பொதுக்குழு, இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் 23-04-2010 வெள்ளிக் கிழமை மாலை4.00 மணி அளவில் மாவட்ட தலைவர் முஸ்ஸமில்ஹார் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஐ.என்.டி.ஜே மாவட்டச் செயலாளர் ஹஸன் அலி, மாவட்டப் பொருளாளர் ஹாஜா மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பேச்சாளர் நிழாமுதீன் அஷ்ரஃபி ஆலிம் “இறையச்சம்” தலைப்பில் மிக உருக்கமாக உரையாற்றினார். பின்னர் மாநில செயலாளர் செங்கிஸ்கான் பொதுகுழுவை மேற்பார்வையிட்டு வழி நடத்தினார். இதில் இராமநாதபுரம் மாவட்டதிலிருந்தும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழுவில் மாவட்ட துணைத் தலைவராக சிக்கல் ஸிராஜ்தீனும், மாவட்டச் துணைச் செயலாளர் ரைஸ் அஹமதும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன் பிறகு மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானங்கள் பின்வருமாறு நிறைவேற்றப்பட்டன:
1. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு மத்தியில் 15% இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கோருகிறது. இதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் விரைவில் நடத்தும் எனத் தெரிவிக்கிறது.
2. மத்திய அரசு ஹஜ் பிரயாணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் உணவும் வழங்க வேண்டும் என பொதுக்குழு வழிறுத்துகிறது.
3. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பகலிலும் இரவிலும் தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது மின்வாரியம் அறிவித்த நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு தொடர்கிறது இதனை உடனே சரி செய்து சீராக வழங்கும்படி இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
4. இராமநாதபுரம் கீழக்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தகவல் : கீழை அப்பாஸ்.


