- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அஸ்ஸலாமு அலைக்கும்.
தனி மனித விமர்ச்சனம் மூலம் மக்கள் மத்தியில் நீங்கள் பிரபலமாக முயற்ச்சிக்கின்றீர்கள் !நான் சொல்லும் குற்றச்சாட்டு உங்கள் தலைவருக்கும் பொருந்தும், முஸ்லிம்கள் ஒன்று கூடி ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைக்கின்றார்கள் அதில் அந்த இயக்கத்திற்க்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டது !
இதில் மனம் புழுங்கி அவர்களை வசைபாடுவது யென்பது உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்கள் மாநாட்டில் இத்தனை பேர் கூடினார்கள்! அவர்கள் அதிகமாக கூறுகின்றனர் அது சம்பந்தமாக நீங்கள் நடத்தும் ஆராய்ச்சி அருவருக்கத்தக்கது உங்களால் முடிந்தால் அதுபோல் நடத்திக்காட்டுங்கள் .அது போல் முடியாது என்பதால் நீங்கள் உங்கள் இனையத்தில் அவர்களை குறை கூறுவது முஸ்லீமிற்க்கு அழகில்லை அவர்கள் அவர்களுடைய இயக்கத்தின் சார்பில் யாரை வேன்டுமானாலும் அழைத்து செல்வார்கள் .இந்த இட ஒதுக்கீடு கோரிக்கைகாக அவர்களிடம் உள்ள நிறைகளை மக்கள் காண்பார்களே ஒழிய நீங்கள் சொல்லும் குறைகளை அல்ல நீங்களும் உங்கள் இயக்கமும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் உங்களின் ஈமானிற்க்கு தூரோகம் செய்யாதீர்கள். உன்மயாளாராய் இருப்பின் இதை பிரசுரிக்கவும். குறிப்பு நான் என் மெயில் அட்ரஸ் பெயர் குறிப்பிட்டு உள்ளேன் இந்த சகோதரரின் கருத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது விளக்கம் தரவும். நன்றி.
வ அலைக்கும் வஸ்ஸலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள விமர்சனம் நேற்று எந்த பெயரும் இல்லாமல் வந்தது. இந்த கடிதத்துடன் சில மோசமான விமர்சனங்களையும் வாசகர்களின் மேலான கவனத்திற்கு என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திக்கு mohamedraj123@gmail.com இந்த இமெயில் முகவரியில் இருந்து முஹம்மது ராஜ என்ற சகோதரர் நமக்கு மீண்டும் பழைய விமர்சனத்தை அனுப்பி இதற்கு விளக்கம் வேண்டும் என கேட்டுள்ளார்.
அவரது விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே நாம் தனிநபரை விமர்த்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகுவதாக குற்றம் சாட்டுகிறார். தனிநபர்களை விமர்சித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது யார்? என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சகோதரர் கேட்ட கேள்வியை தமிழக முஸ்லிம்கள் மத்தியில் வைத்தால் நியாயவான்கள் மத்தியில் இருந்து வரும் ஓரே பதில், பிஜெ என்பவரை தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.
தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக....
ஸஹாபாக்களை “கிரிமினல்“ என்பது, மார்க்கத்திற்கு தனது வாழ்நாளை முழுவதும் தியாகம் செய்த சிறந்த அறிஞர்கள் பலரை தடம் பிரண்டவர்கள் என்பது, தன் கருத்துக்கு எதிராக விளக்கம் கேட்கும் இக்கால அறிஞர்களை பொய்யர்கள் என்பது, தான் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிய தன் முன்னாள் சகாக்காளை பொய்யர்கள், திருடர்கள், பெண் பித்தர்கள், அமானித மோசடியாளர்கள் என எவ்வித இறையச்சமும் இன்றி தனிநபரை தரக்குறைவாக விமர்சித்து மக்கள் உழைப்பான பத்திரிக்கை, சிடி, வீடியோ, டிவி என விமர்சித்து யார்? இவரா? நாங்களா? மறுமை மீது அச்சம் கொண்ட மக்களுக்கு நன்கு தெரியும்.
மார்க்கம் சம்பந்தமாக, சமுதாயம் சம்பந்தமாக கேள்வி கேட்கும் ஒருவரிடம், அவர் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறதா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமா? வேண்டாமா? என்றில்லாமல் , கேள்வி கேட்டவருடைய பின்புலங்களை ஆராய்ந்து விமர்சிக்கும் இவர், தேவையில்லாமல் எங்களை கடுமையான முறையில் காயப்படுத்தியப் பொழுது, அதற்கு தக்க விளக்கம் அளிப்பது தனிநபர் விமர்சனமா? நீங்கள் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறதா என ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து பாருங்கள்.
அடுத்தாக தாங்கள், கடந்த ஜுலை 4 அன்று நடைபெற்ற மாநாட்டை விமர்சித்துள்ளதாக சொல்கிறீர்கள். மாநாட்டை விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியவர் பிஜேதானே தவிர நாங்கள் அல்ல.
எடுபடாத வாதங்கள் என்ற பெயரில் அவர் மூன்றாம் தர விமர்சனங்களை எங்கள் மீது வைத்தார். அதற்கான பதில் அளித்தோம்.
இந்த மாநாடு தேவை என்பதையும், அது எப்போது எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள் சொன்னோம். மக்கள் மன்றம் (மாநாடு ஓர் பார்வை...) என்ற கட்டுரையை பார்வையிடுங்கள். அதில் நியாயமில்லாத விஷயங்களை சுட்டிக்காட்டுங்கள்.
மனிதன் என்ற ரீதியில் நாங்கள் தவறு செய்யலாம். அதை முறையான ரீதியில் சுட்டிக்காட்டினால் நிச்சயமாக நாங்கள் அந்த தவறை தயவு தட்சணமின்றி ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு இம்மை வாழ்வை விட மறுமைதான் நிரந்தரமும், வெற்றியுமாகும். உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
வஸ்ஸலாம்.
வெப்மாஸ்டர்.


