INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,594
  • Visitors:
  • Today: 3
    This week: 127

பன்றிக் காய்ச்சலும் நாம் பின்பற்ற வேண்டியவையும்!

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. நெல்லையில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். மதுரையில் கர்ப்பினிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.

கோவையில் பன்றி காய்ச்சலில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்து விட்டது. இதில் மூன்று வயது குழந்தையும் உண்டு என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

கோவையைப் போன்று கேரள எல்லையோர மாவட்டங்களான மதுரை மற்றும் நெல்லை பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நெல்லை மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்காமல் வெறும் குளுகோஸ் மற்றுமே ஏற்றுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலுக்கு போதிய மருந்துகள் கைவசம் உள்ளதாக கோவை மாவட்ட மருத்துவக் கண்கானிப்பாளர் மதிவாணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால் நெல்லையில் மருந்துகள் இல்லாத நிலையை நோயாளி ஒருவரே பட்டவர்த்தனாமாக தெரிவித்திருக்கிறார். மாநில சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் உரிய விளக்கம் அளிப்பாரா என்பதே பொது மக்களின் எதிபார்ப்பாக உள்ளது.
 
பன்றிக்காய்ச்சல் என்ற பயமோ பீதியோ வேண்டாம் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்காக பொதுவாக நாம் கடைபிடிக்க வேண்டியவை என சில முக்கிய குறிப்பகளை அது பட விளக்கத்துடன் வெளியிட்டுள்ளது.

தகவல் : நூருல் அமீன், நாச்சியார் கோவில்

 

INTJ திரட்டி

Syndicate content