INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

அற்புத மனிதர் அபூபக்கர் (ரழி) அவர்கள்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 

நபி [ஸல்] அவர்களின் இந்த உம்மத்தில் தலை சிறந்தவர் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் என்பதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இத்தகைய சிறப்பு அவர்களுக்கு இருந்தும், சொர்க்கத்திற்கு உரியவர் என்று இறைத்தூதரால் பிரகடனப் படுத்தப்பட்ட பின்பும் அபூபக்கர் (ரழி) அவர்களின் அமல்கள் குறைந்ததா என்றால் இல்லை. நல்லமல்கள் என்று எவையெல்லாம் உள்ளதோ அவைகளை அன்றாடம் செய்யக்கூடிய அற்புத மனிதராக அபூபக்கர் (ரழி) அவர்கள் திகழ்ந்துள்ளதற்கு சான்றாகவும், நமக்கும் அத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த பொன்மொழி இங்கு பதியப்படுகிறது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஒருநாள்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார் என்று கேட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றைய தினம் உங்களில், ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்றவர் யார் என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் உங்களில் ஒரு ஏழைக்கு உணவளித்தவர் யார் என்று கேட்டார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள், 'நான்' என்றார்கள்.

இன்றையதினம் ஒரு உங்களில் ஒரு ஒரு நோயாளியின்நலம் விசாரித்தவர் யார் என்று கேட்டார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள், 'நான்' என்றார்கள்.

அப்போது இறைத்தூதர் அவர்கள், இவை அனைத்தும் ஒரு மனிதரிடத்தில் ஒன்று சேர்ந்தால் அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்).

ஆக்கம் : முகவை அப்பாஸ்.

INTJ திரட்டி

Syndicate content