INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

அதிரையில் எழுச்சி மிகு மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அதிரையில் கடந்த 02.07.2010 வெள்ளிக் கிழமை அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் ரஸுல் முஸ்தஃபா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஸாஜித் பாட்ஷா, ஷம்ஸுதீன், அதிரை அபுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பண்ருட்டி மவ்லவி முஹம்மது ஜஹீர், மாமறை அழைக்கிறது என்ற தலைப்பில் மிக சிறந்த உரையை அருமையாக வழங்கினார். அதனை தொடர்ந்து தவ்ஹீத்வாதி யார்? என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஆணித்தரமான கேள்விகளுடன் எடுத்த வைத்த உரை மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது. இறுதியாக மாநிலத் தலைவர் பாக்கர் சமுதாய விழிப்புணர்வு குறித்து உணர்ச்சிபூர்வமான உரையை ஆற்றினார்.

அதிரை மக்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்ட இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக அதிராம்பட்டிணத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நகர கிளை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஸையத் இக்பாலால் திறந்து வைக்கப்பட்டது. மாநிலத் தலைவர் ஜமாஅத் கொடியினை ஏற்றி வைத்தார்.

மிகச் சிறப்பான  உற்சாகத்தையும்,  மகிழ்ச்சியும் பாக்கர் உட்பட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அதிரை மக்கள் வழங்கினர். நிகழ்ச்சியினை மிகச் சிறப்புடன் அதிரை நகர் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாக்கர் குறித்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் அத்தனையும்  அதிரை மக்களிடமும் எடுப்படவில்லை என்பதை இந்த கூட்டம் நிரூபித்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ். (வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்)

தகவல் : அதிரை அபுல் ஹஸன்.

  

INTJ திரட்டி

Syndicate content