- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

இன்று (1 டிஸம்பர்) உலக எய்ட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தின் நோக்கம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை அந்த உயிர் கொல்லி நோயிடம் இருந்து காப்பதுதான். நோக்கம் என்னவோ நல்லதான் இருக்கு, ஆனால் அதற்கான வழிமுறைகள்தான் சரியாக இல்லை.
எனவேதான் பலகோடி மில்லியன் ரூபாய்கள் உலக அளவில் செலவிடப்பட்டும், அரசும், தன்னார்வ அமைப்புகளும் பெருமுயற்சி செய்தும் இந்த எய்ட்சால் பாதிக்கப்படுவோர் பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது. பொதுவாக,ஒருவிஷயத்தை நாம் தடுக்கவேண்டுமெனில், அதன் ஆணிவேரை கண்டறிந்து அழிக்கவேண்டும். அல்லாமல் மேல் கிளைகளை வெட்டுவதால் எவ்வித பயனும் இல்லை.
அதுபோல்தான் இந்த எய்ட்ஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு வெறுமனே விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, எய்ட்ஸ் பாதுகாப்பு மய்யங்களோ தீர்வாகாது. எய்ட்ஸ் நிரந்தரமாக உலகிலிருந்து துடைத்து எறியப்பட்ட வேண்டுமென்றால்,
சின்னத் திரையிலும், வண்ணத் திரையிலும் வரும் ஆபாச காட்சிகள் கண்டிப்பாக நீக்கப்படவேண்டும்.
ஆபாச உடைஅணிந்து நடிக்கும் நடிகைகள் மீதும் அவ்வாறு நடிக்க வைத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீதும் விபச்சார தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு தொடரவேண்டும்.
ஆபாசகாட்சிகளை [கவனித்தவுடன்] கத்தரி போட மறக்கும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு கத்தரி போடவேண்டும்.[அதாவது பணி நீக்கம் செய்யவேண்டும்] ஆபாச பாடல் எழுதும் பாடலாசிரியர்கள் மீது விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும். மஞ்சள் படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதோடு, திரையரங்கதின் உரிமமும் ரத்து செய்யப்பட வேண்டும்.ஆபாச படங்கள், செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.
இந்தியாவில் அனுமதி பெற்றும் பெறாமலும் நடத்தப்படும் அனைத்து விபச்சார விடுதிகளும் மூடப்பட்டே ஆக வேண்டும். விபச்சாரம் செய்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபச்சார தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும் காவல்துறை 'கருப்பு ஆடுகள் 'மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விபச்சாரிகளை கைது செய்தவுடன் அந்த செய்தியை, 'அழகிகள் கைது' என்று போடாமல் விபச்சாரிகள் கைது என்று போடவேண்டும்.
கலாச்சார சீரழிவை உண்டாக்கும் டேட்டிங், லவ்வர்ஸ்டே, வீக்எண்டு கொண்டாட்டங்கள் தடுக்கப்படவேண்டும். பீச்,பார்க் உள்ளிட்ட போது இடங்களில் சில்மிசங்களில் ஈடுபடும் காதலர்கள்[?] மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். விடுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி அறை ஒதுக்குவதை தடுக்கவேண்டும்.
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை கலக்கும் வகையில் பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது நிறுத்தப்பட வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
திருவிழாக்கள் என்றபெயரில்,கலை நிகழ்ச்சி என்றபெயரில் நடத்தப்படும் ஆபாச கச்சேரிகள் நிறுத்தப்படவேண்டும்.
மொபைல் போனில்,கிசுகிசு வேண்டுமா?ஹாட் ஜோக் வேண்டுமா? என்று கேட்கும் மொபைல் நிறுவனங்களிடம் எச்சரிக்கவேண்டும். மொபைல், இன்டர்நெட் முலம் ஆபாசத்தை பரப்பும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட விஷயங்களை தடுக்காமல் இன்னும் எத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டாலும் அது விழலுக்கு இறைத்த நீர்போன்று ஆகுமே தவிர, எய்ட்சை ஒழிக்க ஒருபோதும் முடியாது.
இதோ அருள்மறை கூறுகிறது; “விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்! அது தெளிவான வெட்கக்கேடானதாகவும், தீமையாகவும் இருக்கிறது”.[17;32]
இறைவாக்கை அமுல்படுத்தினால் உலகில் எய்ட்ஸ் இருக்குமா..? எதோ நம்மால முடிஞ்சது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
(முகவை அப்பாஸின் முகவை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பூவிலிருந்து பதியப்பட்டது)


