INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் 03.07.2010 அன்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, அதன் மீது எடுக்கப்பட்ட- எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாமென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாக பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை (சட்ட மசோதா) தயாரிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

- தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்'' பெயரில் ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுவது ஆண்டுதோறும் தொடரும் என்ற முடிவினையொட்டி, இந்த ஆண்டும் அதற்கான கருத்துரு பெற்று அறிவிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

- தமிழகத்தின் பள்ளி- கல்லூரி- பல்கலைக்கழக பாட திட்டங்களில்; "தமிழ் செம்மொழி'' என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்யப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பேசப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதுபற்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளையும் இது குறித்து கேட்டுப்பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விரிவாக பேசப்பட்டது. இது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு-மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் தேவையான அளவு மானிய தொகையினை வழங்கிட மத்திய அரசை கேட்டு கொள்வது தொடர்பான தீர்மானம் குறித்து பேசப்பட்டது.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக- நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பதை நிறைவேற்றிட தமிழக அரசுக்கு, அலுவலர்களும், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டுமென்ற தீர்மானம் பற்றி பேசப்பட்டு, அது குறித்து தலைமை செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

INTJ திரட்டி

Syndicate content