INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் மாணவர்களுக்கு தேர்வுக் குழு எச்சரிக்கை!

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிகளில் மட்டும் டி.டி. எடுக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. 

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய ரூ.10,500 கட்டணம், கவுன்சலிங் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுக்கு டி.டி. அளிக்க எவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை; எனவே தனி நபர் எவரிடமும் பெறாமல், வங்கிகளில் மட்டும் இந்தத் தொகைகளுக்கான டி.டி.யை ‘S‌ec‌r‌e‌ta‌r‌y,​S‌e‌l‌ec‌t‌i‌o‌n C‌o‌m‌m‌i‌t‌t‌e‌e, K‌i‌l‌p‌ua‌k, C‌h‌e‌n‌na‌i’​என்ற பெயருக்கு எடுக்குமாறு மாணவர்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி உஷார்படுத்தியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 28-ம் தேதி முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் தொடங்குகிறது. அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு கட்டணம் ரூ.10,500. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியர்), பழங்குடி வகுப்பினர் ஆகியோருக்கு  எம்.பி.பி.எஸ். படிப்புக் கட்டணம் ரூ.8,500. அனைத்து வகுப்பினரும் கவுன்சலிங் கட்டணம் ரூ.500-க்கு தனியாக டி.டி. எடுத்து வர வேண்டும். கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் வராத நிலையில், கவுன்சலிங் அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

 முதல் கட்ட கவுன்சலிங்கில் கலந்து கொள்ளத் தவறிய மாணவர்கள், எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கவுன்சலிங்குக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும்போது மாணவ-மாணவியருக்குத்  தேவையான 16 முக்கிய விஷயங்கள், சுகாதாரத் துறையின் இணையதளம் w‌w‌w.‌t‌n‌h‌ea‌l‌t‌h.‌o‌r‌g  மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

 

INTJ திரட்டி

Syndicate content