- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
விமான நிலையங்களில் புகைபிடிக்க ஸவூதி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸவூதியில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைபழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், புகையிலை மற்றும் சிகரெட் நுகர்வில் ஸவூதி உலகிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. 10 சதவீத பெண்கள் மற்றும் 19.3 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 1.3 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் அங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் 400 பேர் வரை இறப்பதாகவும் தெரியவந்துள்ளது.
புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த 2003ம் ஆண்டு அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகளை புகைபிடிப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பெருகி வரும் சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த சவூதி அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. விமான நிலையங்களில் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற 150 உறுப்பினர்களை கொண்ட ஷுரா கவுன்சிலின் பரிந்துரைக்கு, அந்நாட்டு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் : கிழக்கு அதிரை வலைப்பூ.


