- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
குவைத்திற்கு சமீபத்தில் வருகை தந்த முனைவர் அப்துல்லாஹ் அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் நிர்வாகி ஸாதிக்குடன் இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸும் சந்தித்தார். அப்போது அவரிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அவை இதோ...
? இஸ்லாத்தைத் தழுவிய பின்பு மனரீதியாகவும், செயல் ரீதியாகவும் எத்தகைய மாற்றத்தை உணர்கிறீர்கள்?
அப்துல்லாஹ்: இஸ்லாதிற்காக முந்தைய எனது நிலை சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கும். உதாணரமாக கோபம் கொள்ளாதீர்கள் என பிறருக்கு உபதேசம் செய்வேன். ஆனால் நா என் சொந்த வாழ்வில் கடைபிடிக்க மாட்டேன். எல்லோர் மீதும் கோபம் கொள்வேன். ஆனால் எனது இஸ்லாமிய தழுவலுக்குப் பின் எனது சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பதை உணருகிறேன். அதை இன்னும் அதிகமாக்க விரும்புகிறேன்.
? தாங்கள் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறீர்கள்! இதுபோல் இந்திய அளவிலும், உலக அளவிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒரு முஸ்லிம் என்றவகையில் களமிறங்குவீர்களா?
அப்துல்லாஹ்: அப்துல்லாஹ் எனும் முஸ்லிமாகிய எனது உயிர், உடமைக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வேனோ, அதுபோல் ஒரு தெரு அளவில், ஊரளவில், நாட்டளவில், உலகளவில் ஒரு முஸ்லிம் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் கண்டிக்காக அதற்காக குரல் கொடுப்பேன்.
? பாபர் மஸ்ஜித் இடிப்பு, தனி இடஒதுக்கீடு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவற்றுக்காக போராடும் முஸ்லிம் அமைப்புகளோடு இணைந்து போராட்டக் களம் காண்பீர்களா?
அப்துல்லாஹ்: கண்டிப்பாக! நான் எந்த அமைப்பிற்கும் எதிரானவன் இல்லை. நீ அந்த அமைப்பு நிகழ்ச்சிக்குப் போனாய். எனவே இங்கு வரக் கூடாது என்று எந்த அமைப்புகள் என்னை தடுக்காத வரையில் அமைப்புகள் நடத்தும் பயனுள்ள விஷயங்களில் அவர்கள் என்னை அழைக்காவிட்டாலும் நான் கலந்து கொள்வேன்.
? தமிழக அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் இணைந்து பணியாற்றலாமே? அதற்கான வாய்ப்புள்ளதா?
அப்துல்லாஹ்: இந்த அமைப்புகள் எதுவும் அல்லாஹ் இல்லை என்று சொல்லவில்லை. சுன்னத் ஜமாஅத்தினர் கூட வலிமார்களின் சிறப்பைக் கூறுகிறார்கள். புரியாத சிலர்தான் வலிமார்களின் சமாதிகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள். எனவே இந்த அமைப்புகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் சாதாரணமானவையே. எல்லோரும் அமர்ந்து பேசினால் சரி செய்து விட முடியும்.
இறைவன் நாடினால் இந்த அமைப்புகளை - பிரிவுகளை ஒன்றிணைக்க என்னால் இயன்றஅளவு முயற்சிப்பேனேயன்றி, ஏதேனும் ஒரு அமைப்பின் முத்திரை குத்திக் கொள்ள மாட்டேன்! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனது தவறைசுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் மத்ஹபை பின்பற்றுகிறார்கள் என்று கூறி புதுப்புது தனிப் பள்ளிகளை கட்டிக் கொள்வது டூ மச்!
? அப்துல்லாஹ் அவர்கள் போகுமிடமெல்லாம் ஷிர்க், பித்அத் ஆகியவைகளை கண்டித்துப் பேசுவதால் அவருக்கு கடும் எதிர்ப்புக் கொடுப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும்(?) நாங்கள்தான் அவரை பயன்படுத்திக் கொள்வோம் என ஒரு அமைப்பு நடத்தும் வார இதழில் கூறியுள்ளதே?
அப்துல்லாஹ்: ஜோதிடம் பார்ப்பது கூடாது என்று இஸ்லாமிய நூல் ஒன்றில் படித்துள்ளேன். (கலகலவெனச் சிரிக்கிறார்)
? நான் பலருடைய குர்ஆன் தமிழாக்கங்களை வாசித்துள்ளேன். எல்லாத் தமிழாக்கத்திலும் உங்கள் தமிழாக்கம்தான் முஸ்லிமல்லாதவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதாக உள்ளது என நீங்கள் கூறியதாக மவ்லவி ஒருவர் கூறியுள்ளது பற்றி...
அப்துல்லாஹ்: என்னைச் சந்தித்த அந்த அறிஞர், எனது தமிழாக்கத்தைப் படித்தீர்களா, எப்படியுள்ளது? என கேட்டார். அப்ப என்னை என்ன சொல்லச் சொல்றீங்க? நான் சொன்னது இதுதான்... அதாவது மற்றதமிழாக்கங்களிலிருந்து மாறுபட்டு எளிய தமிழ் தர முயற்சித்துள்ளீர்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள் என்றுதான் கூறினேன். மற்றபடி மற்றதமிழாக்கங்களை விட உங்கள் தமிழாக்கம்தான் மேலானது, சிறந்தது என்று நான் சொல்லவில்லை. எல்லாத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினா நான் என்னங்க பண்ண முடியும்!
? பெரியார்தாசன் எந்த பேசிக்கில் இஸ்லாத்திற்கு வந்தார் என்று வாட்ச் பண்ணுவோம் என்று கூறியது பற்றி...
அப்துல்லாஹ்: அவர் என்னை நேரில் சந்தித்தபோது அது பற்றி விளக்கினார். எப்போது அவர் என்னை சந்தித்தாரோ அப்போதே கண்காணிப்பு காலாவதியாகிவிட்டது. (சிரிக்கிறார்)
? மக்கா மஸ்ஜிதில் நீங்கள் உரையாற்றியபோது அந்த அறிஞரின் குர்ஆன் தமிழாக்கத்தை சிலாகித்துக் கூறியதாகவும், அதை சி.டி. வெளியிடும்போது ஷம்சுத்தீன் காஸிமி "எடிட்' செய்து விட்டதாகவும் கூறப்படுவது பற்றி...
அப்துல்லாஹ்: மக்கா மஸ்ஜிதில்தான் அவரது தமிழாக்கம் பற்றி பேசவுமில்லை. அதை காஸிமி அவர்கள் எடிட் செய்யவுமில்லை.
? தங்களது அமைப்பிற்கு கூட்டம் சேர்க்க முடியாதவர்கள் பெரியார்தாசனை முன்னிறுத்தி அவருக்காக கூடும் கூட்டத்தை தமது அமைப்பின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருவதாக ஒரு விமர்சனம் சமீபகாலமாக செய்யப்படுகிறதே!
அப்துல்லாஹ்: இதிலென்ன தவறு இருக்கிறது? கூட்டத்தினர் மத்தியில்தான் தாஃவா செய்ய முடியும். அந்தக் கூட்டம் பெரியார்தாசனால் வருமெற்ôல் அதைப் பயன்படுத்தி தாஃவா செய்வதில் என்ன தவறு? தெளிவாக சொல்வதானால் கூட்டம் உள்ளவர்களுக்கு அப்துல்லாஹ் தேவையில்லை!
? நீங்கள் திருக்குர்ஆனைத் தேடிப் போய் உங்கள் சொந்தப் பணத்தில் வாங்கியதாகவும், எந்த முஸ்லிமும் உங்களுக்கு குர்ஆனை தர முன் வரவில்லை என்றும் நீங்கள் பேசும் மேடைகளில் சொல்லி வருகிறீர்கள்! பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத், "மாமறைக் குர்ஆனை மக்களிடம் சேர்க்கும் நிகழ்ச்சி' என மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி பற்றியும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
அப்துல்லாஹ் - நான் சவூதியில் இஸ்லாத்தைத் தழுவி உம்ராவும் செய்துவிட்டு, இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை எனது துணைவியாரிடம் கூறியபோது அவர்கள் அழுதவர்களாக எனக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பைப் பற்றி விவரித்தார்கள். நான் ஏர்போட்டில் வந்திறங்கிய போது, அல்லாஹ் நாடியது தான் நடக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்ட போதிலும், சற்றேஅச்ச உணர்வு இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
என்னை வரவேற்க எனது குடும்பத்தார் தான் வருவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நான் சென்னை விமான நிலையத்தில் இறங்கிப் பார்த்தபோது அங்கே சகோதரர் பாக்கர் தனது அமைப்பின் தொண்டர்களோடு என்னை வரவேற்றார். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
மாமறைக் குர்ஆனை மக்களிடம் சேர்ப்பிக்கும் அந்த நிகழ்ச்சி மகத்தான ஒன்றாகும். அதை மனதாரப் பாராட்டுகிறேன். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
நன்றி : சமுதாய மக்கள் ரிப்போர்ட்


