- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கர்ப்பிணிப் பெண்கள் மீன் வகை உணவுகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டன. இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.இதன் முடிவில், மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய ஜேக் வின்க்லெர் கூறியதாவது:கர்ப்ப காலத்தில், அதிகமாக மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அதிக புத்திக் கூர்மையுடன் பிறக்கும். அந்த குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது, மூளை தொடர்பான நோய்கள் தாக்குவது குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். இந்த ஆய்வானது கர்ப்பிணிகளிடமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப்பட்டது.
அதில், கர்ப்ப காலத்தின் போது அதிக மீன் உணவுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள், அதிக புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பதும் தெரியவந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு காரணமான, "ஒமேகா -3 பாட்டி ஆசிட்' மீன்களில் அதிகமாக இருப்பது தான். கர்ப்பிணிப் பெண்களின் 32 வார கர்ப்ப காலத்தில், 340 கிராமிற்கு குறைவாக மீன் உட்கொண்ட கர்ப்பிணிகளின் குழந்தைகளின் புத்திக் கூர்மை சற்று குறைவாகவே இருந்தது. அதேநேரம் குழந்தைகளின் உடம்பில், "ஒமேகா -3 பாட்டி ஆசிட்' அளவுக்கு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் புத்திக் கூர்மை மழுங்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு ஜேக் வின்க்லெர் கூறினார்.
-அப்துர் ரஸாக், முமுக, துபை.


