INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

ஓமனில் பெட் புயல் - கடும் மழைக்கு 24 பேர் பலி!

அரபுக் கடல் பகுதியில் உருவான புயல் சின்னத்தால் குஜராத் கட்ச் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு 8 பேர் பலியாகினர்.  குஜராத்தை தாக்கிய பெட் புயல் மெல்ல நகர்ந்து ஓமானை தாக்கியது.

பெட் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று ஓமான் நாட்டின் கடலோரப் பகுதியான சூர் மற்றும் குரியத்  பகுதிகளில்  கடும் மழை பெய்தது. இந்த மழைக்கு வெளிநாட்டவர் உட்பட 24 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகிறது.

சூர் பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாடிகளில் ஏற்பட்ட வெள்ளப் பேருக்கு காரணமாக பலர் இழுத்து செல்லப் பட்டுள்ளனர். வாகனங்களும் இழுத்து செல்லப் பட்டு ஆங்காங்கே மிதந்து வருகின்றன.

புயல் அச்சம் காரணமாக சனிக் கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டு பொது விடுமுறை அறிவிக்கப் பட்டது. புயல் நேரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வரும் மீட்பு குழுவினரின் பணிகள் பாராட்டுதலுக்குரியது.

தகவல் அல் அமீன், இந்நேரம்.காம்

INTJ திரட்டி

Syndicate content