- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பஷீர் அஹமது தலைமையில் இயங்கிவரும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தைப் போலவே மருத்துவச் சேவைகளை மிகுந்த ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுட னும் செய்து வருகிறது.
பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காகவும், இரத்த தானம் வேண்டியும் எர்ணாகுளத்திலுள்ள பிரபல நவீன மருத்துவமனையான மாதா அமிர்ந்தானந்தமயி மருத்து வமனைக்கு (ஏ.எம்.ஐ.எஸ்.ஆர்.) வரும் நோயாளிகளுக்கு இரத்ததானம் ஏற்பாடு செய்வது முதல் அத்துனை மருத்தவ உதவிகளையும் ஜமாஅத் செய்து வருகிறது.
ஏ.எம்.ஐ.எஸ்.ஆர். மருத்துவமனைக்கு வரும் தமிழகம் உட்பட பல்வேறு மாநில மக்களுக்கு இரத்ததானம் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை நிர்வாகம் உடனே கை காட்டுவது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைத்தான். இது தவிர, அங்கு வரும் முஸ்லிம் நோயாளிகள், அவர்களது உறவினர்களின் தொழுகைக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி ஒரு பள்ளிவாசலையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இங்கேயே ஏற்பாடு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
எர்ணாகுளம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகள் குறித்து பிற சமய மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் சில துளிகள் இங்கே...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஏம்.எம்.ஐ.எஸ்.ஆர். என்ற மருத்துவமனை பற்றி கேட்டு அறிந்து அங்கு சென்றோம். மொழி அறியா அந்த மாநிலத்தில் திக்கற்று நின்ற எங்களுக்கு உதவியவர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஏ.எம். பஷீர் அஹ்மது என்பவர். இவர் அங்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரத்த வங்கியை நடத்தி வருகிறார். அங்கு வருபவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவி வருகிறது இந்த ஜமாஅத்.
- இ.கே. நாச்சி முத்து - என் அஜிதா தம்பதியினர், ஈரோடு
இருதய அறுவை சிகிச்சை வேண்டி அமிர்தா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டருக்கு வந்தேன். வந்த இடத்தில் ஊடகங்கள் மூலமாக எர்ணாகுளம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ உதவிகள் செய்யும் தொண்டு அமைப்பு என்பதை அறிந்தேன். எங்களுக்கு கூட இருந்து கடைசி வரை இரத்ததானம் மட்டுமல்லாமல் அனைத்து உதவிகளையும் தவ்ஹீத் சகோதரர்கள் செய்து கொடுத்தனர். எனது நன்றிகளை இந்திய தவ்ஹீத் ஜமாஅதிற்கு உரித்தாக்குகிறேன். வாழ்க பாரதம்! வளர்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத். - பொ. தங்கராஜ், எட்டையபுரம், தூத்துக்குடி மாவட்டம்
நான் ஒரு இருதய நோயாளி. எர்ணாகுளம் அமிர்தா மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். எனக்கு அங்கே தேவைப்பட்ட குருதியை திரட்ட மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை பற்றி கேள்விப்பட்டு அவர்களை தொடர்பு கொண்டபோது குருதிக் கொடையாளர்கள் ஆறு பேரை ஜமாஅத் அனுப்பி வைத்தது உண்மையில். ஜமாஅத்தின் பணிகளை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். இப்பணி தொடர வாழ்த்துகிறேன். - எஸ். ராமகிருஷ்ண ராஜா, ராஜபாளையம்.
என் மகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக அமிர்தா மருத்துவமனை சென்றபோது பாஸிடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. என் மகன் உயிர் பிழைக்க இந்திய தவ்ஹீத் அமைப்பினர் ரத்தம் வழங்கி உதவி செய்தனர். -ஏ. அமுதா, வித்தியாலயம், திருப்பூர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேரளா அமைப்பின் மருத்துவ உதவிகளை பயன்படுத்திக் கொள்ள தொடர்பு கொள்க :
ஏம்.எம். பஷீர் அஹ்மது,
தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
மார்க்கெட் ரோடு, எர்ணாகுளம், கேரளா.
அலைபேசி: 09895091387, 09809219987
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயமான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


