INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

அடாது மழையிலும் தென் சென்னையில் விடாது நடந்த தர்பியா

15.11.2009 அன்று தென்சென்னை மாவட்டத்தில் தர்பியா நிகழ்ச்சி அடாது மழையிலும் அருமையாக நடைபெற்றது. 

கடுமையான மழையின் காரணமாக நிகழ்ச்சியினை நிறுத்தலாம் என ஆலோசித்தப் போதும் தென் சென்னை மாவட்டச் செயலாளர் காஜா கலிமுல்லாஹ் பிடிவாதமாக நடத்தியே தீருவது என்ற முடிவின் காரணமாக தாமதமாக நடைபெற்றது. மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீனின் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஷஹாதத் கலிமாவை ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் விளக்குமாறு முஹைதீன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மிகச் சிறப்பாக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். முறையான பயிற்சியினை பெற்றால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்கு ஜும்ஆ மேடை, பொதுக்கூட்டம், தொலைக்காட்சி வாயிலாக பெரிய பேச்சாளராகலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி ஒவ்வொரு ஞாயிறும் நம் தலைமையகத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது. 

அதன் பிறகு மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இஸ்லாமிய இயக்கங்கள் பற்றியும், தவ்ஹீத் எழுச்சிப் பற்றியும் ஆற்றி உரையை தொடர்ந்து மக்களிடம் கேள்வி கேட்டு பாடமாக நடத்தியது வித்தியாசமான கோணமாக இருந்தது.

வீறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த தர்பியா முகாம் வரும் வாரங்களிலும் தொடரும் என அறிவிப்பு செய்யப்பட்டது. தென் சென்னை கிளை மிகச் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தது.

 

INTJ திரட்டி

Syndicate content