இரத்ததான சேவைக்கு விருது!

சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கழகம் கடந்த 2005ம் ஆண்டு முதல் இரத்த தானம் செய்யும் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கழும் விருதுகளும் வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2008-2009ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான சேவையைப் பாராட்டி 2 விருதுகளும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில இரத்ததான பொறுப்பாளர் கலிமுல்லாஹ் மற்றும் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காஜா ஆகியோர் ஒரு விருதையும் மாநிலச் செயலாளர் அபு ஃபைசல் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் யூசுஃப் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றொரு விருதையும் பெற்றுக் கொண்டனர்.


