INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,204
  • Visitors:
  • Today: 12
    This week: 308

இஸ்லாமிய அறிஞர் ஷேக் தன்தாவி வஃபாத்தானார்.

உலகின் பிரபல மார்க்க அறிஞரும், எகிப்தின் பிரசித்திப் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவருமான ஷேக் முஹம்மது ஸய்யித் தன்தாவி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.).
ஸவூதி அரேபியாவில் வருகை புரிந்திருந்த அவர் எகிப்திற்கு செல்லும் வழியில் விமானநிலையத்தில் வைத்து இதய அதிர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக மரணம் நிகழ்ந்தது.
தன்தாவி மதீனா பல்கலைக்கழகத்தில் குர்ஆன் ஆய்வு பிரிவு தலைவராகவும் இருந்தார். 7000 பக்கங்கள் அடங்கிய 15 தொகுதிகள் கொண்ட அவருடைய திருக்குர்ஆன் தப்ஸீர் பிரபலமானதாகும்.
1996 ஆம் ஆண்டு எகிப்து அரசு தன்தாவியை அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமித்தது. உடல் உறுப்புகள் தானம், வங்கியல், பெண்களுக்கு பொது இடங்களில் அனுமதி ஆகியவற்றைக் குறித்த அவருடைய மிதமான நிலைப்பாடு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. நாளை(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப்பின் மதீனாவில் அவருடைய ஜனஸா அடக்கம் செய்யப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரு பெண் உட்பட மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் தன்தாவி.
 
செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ்
 

 

INTJ திரட்டி

Syndicate content