கடந்த மார்ச் 4-ஆம் தேதி டெல்லி சென்ற தேசியலீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அஹ்மது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை சந்தித்தார்.
பஷீர் அஹ்மது அவர்களை வரவேற்ற சோனியாவிடம், கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு இந்திய வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் பாதிக்கிறது. ஆகவே இச்சட்டத்தை திருத்த ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்காக கொடுக்கப்பட்ட மனு பெற்றுக் கொண்ட சோனியா காந்தி, அதற்கான முயற்சியினை மேற் கொள்வதாக தெரிவித்தார்.


