சமுதாயத்தில் கல்வியிலும், பொருளாதாரம், அரசியலிலும் தலித் மக்களைவிட பின் தங்கியுள்ளார்கள் முஸ்லிம்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்தார். 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டியது நம் கடமை என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதிபதிகளின் உள்ளப்பூர்வமான அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு நிறைவேற்றப்படும் வரை நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மிக விரைவில் தொடர் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
விழித்திருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் விடா முயற்சியின் பலனாக கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் மாற்றம் பெற இருக்கிறது. அவ்வாறே நம் அமைப்பு அறிவிக்க இருக்கும் தொடர் போராட்டத்தால் அல்லாஹ் வெற்றி அளிக்க போதுமானவன்.
உளப்பூர்வமாக பிரார்த்தியுங்கள், வல்ல ரஹ்மான் வழி வழங்குவான்.


