INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,589
  • Visitors:
  • Today: 35
    This week: 175

இஸ்ரேல் பிரதமர்:நெதன்யாகுவை கைது செய்ய சட்ட வல்லுநர்களுடன் துபை போலீஸ் ஆலோசனை

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையில் பங்காற்றியதாக தெளிவான ஆதாரம் கிடைத்த சூழலில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதின் தலைவர் மெயர் தகான் ஆகியோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை துபை போலீஸ் வலுப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கு வழக்குரைஞருடன் சட்ட ஆலோசனைக் கோரியதாக துபை போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி அறிவித்தார்.
கைதுச் செய்வதுக் குறித்து இந்தவாரம் முடிவுச் செய்யவிருப்பதாகவும், மொஸாதின் சதித்திட்டம் குறித்து அதிக விபரங்கள் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மப்ஹுஹ் கொலையில் கூறப்படும் குற்றச்சாட்டை இதுவரை இஸ்ரேல் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையே போலி சிம் கார்டு, க்ரெடிட் கார்டு ஆகியவை தயார் செய்ததைப் பற்றி எஃப்.பி.ஐ குழு அமெரிக்காவில் மெட்டா வங்கியில் ஆதாரங்களை சேகரித்தது. கொலையாளிகள் 13 பேருக்கு மெட்டா வங்கி க்ரெடிட் கார்டு வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தித்தான் கொலையாளிகள் விமான டிக்கெட் வாங்கியது, ஹோட்டல் அறையை முன்பதிவுச் செய்ததும். ஆனால் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என மெட்டா வங்கி விளக்கம் அளித்துள்ளது.
 
மப்ஹூ கொலைக்கு பிறகு இஸ்ரேலிய குடிமகன்கள் துபையில் நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
 
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

INTJ திரட்டி

Syndicate content