புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் அரசு ஆன்லைன் முறையை அமல்படுத்தி, வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு "செக்' வைத்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு வந்த விண்ணப்பங்கள் மாவட்ட வழங்கல் அதிகாரி மூலம் கலெக்டர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர்களின் ஒப்புதலை அடுத்து எல்காட் நிறுவனத்தில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
எஸ்.எம்.எஸ்.: எல்காட் நிறுவனம், விண்ணப்பித்தவர்களின் விவரங்களை இணைய தளத்தில், பெயர் முகவரி, மொபைல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்கிறது. ரேஷன் கார்டு தயாரிக்கும் போதே, கார்டு கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஆன் லைன் மூலமாக, புதிய எண்ணுடன் உங்களது ரேஷன் கார்டு தயாராகி விட்டது. பத்து நாட்களுக்கு பின், ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பத்தை சமர்ப்பித்த வட்ட வழங்கல் அதிகாரியிடமிருந்து, ரேஷன் கார்டுபெற்றுக்கொள்ளலாம் என எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வகையில், சாப்ட்வேர் தயாரித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், கார்டு குறித்து இனி கவலைப்பட தேவையில்லை. ஊழல், தாமதமில்லாமல் கிடைக்க ஏற்பாடு: புதிய கார்டுகள் தயாரான விவரம் மக்களுக்கு தெரிந்துவிடுவதால் புது கார்டுகளை வைத்துக்கொண்டு யாரும் காலம் தாழ்த்த முடியாது. இதன் மூலம் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அரசு "செக் வைத்துள்ளது. இப்புதிய முறை மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் எனத்தெரிகிறது.
நன்றி : இந்நேரம்.காம்


