கடந்த 14-02-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பாக முஸ்லிம் அல்லாத பிற சமய மக்களுக்கு மனித குலத்திற்குச் சொந்தமான உலகப் பொது மறையாம் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி பெரியகுளம் வெங்கடாசலபதி மண்டபத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.ஷர்புதீன் தலைமையில் துவங்கியது. மாவட்டத் தலைவர் ஜமால் முஹைதீன், ராஜா முஹம்மது, நூர் முஹம்மது, மஸ்தான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் மிக அருமையான விளக்கதுடன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்தீக், துணைத் தலைவர் முனீர், துபை மண்டல ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், விண் டி.வி அதிபர் தேவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பிற சமய மக்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகளை வழங்கினர். தொடர்ந்து இஸ்லாம் குறித்தும், திருமறைக் குர்ஆன் குறித்தும் வந்திருந்த மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பெண்கள் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். திருக்குர்ஆனை பெற்றுக் கொள்ள மாற்று மத சகோதர, சகோதரிகள் முண்டியடித்து நின்றது கலந்து கொண்டவர்கள் மனதை நெகிழச் செய்தது.


