INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

திருமணப் பதிவுச் சட்டமும் - திமுக பொதுக் குழு தீர்மானமும்!

கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றவழிகாட்டுதல் எனும் பெயரில் நாட்டில் நடைபெறும் அனைத்து திரமணங்களைப் பதிவு செய்திட சட்ட முன் வடிவு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட உடனúயே அதன் அறிமுக நிலையிலயே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதனை கடுமையாக எதிர்த்தது.

மேலும் அதற்கென சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஒரு மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தியது. அதுமட்டுமின்றி இந்தச் சட்டத்தின் விளைவுகளையும், பொது சிவில் சட்டத்திற்கான முன்னோட்டம் என்பதையும், அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும் மஹல்லா ஜமாஅத்துகளுக்கும் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் எழுதிய விளக்கக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

சமுதாய அக்கறைகொண்ட நமது முயற்சியை முதலில் புரிந்து கொள்ளாத முஸ்லிம் லீக், தமுமுக போன்றஇயக்கங்கள் முதலில் இதை ஆதரித்தன. ஆனால் இறையச்சத்தோடு, சமுதாய உணர்வோடும் நாம் எடுத்த முடிவை ஒட்டு மொத்த சமுதாயமும் இன்று உணர்ந்து ஒரே குரலில் சட்டத்தை எதிர்த்ததன் விளைவு நம்முடைய கோரிக்கை முதல்வரின் வாய்மொழி அறிவிப்பாகவும், திமுக பொதுக்குழு தீர்மானமாகவும் வந்திருக்கிறது.

நம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எள்ளி நகையாடிய தனி நபர் ஜமாஅத்தின் தலைவர் ""இது உச்சநீதிமன்றஉத்தரவு. இவர்கள் எதிர்ப்பது வீண் வேலை'' என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார்! இன்னும் அவருடைய பாஷையில் சொல்லப்போனால், திமுகவின் சிறுபான்மைப் பிரிவாய் மாறிப்போய், இஒதுக்கீட்டுக்காக "ரோஸ்டர் - போஸ்டர்' என வக்காலத்து வாங்கியவர்களை விட கேடு கெட்ட கீழ்நிலைக்கு சென்று, "கேள்வி கேட்டால் சட்டமாகி விடும்' என மார்க்க ஆதாரமெல்லாம் கூறி மக்களின் வாயடைக்கச் செய்தவர்களை வாயடைக்கச் செய்த திமுக பொதுக்குழு தீர்மானம் இதோ...

""உச்சநீதிமன்றம் தெரிவித்த வரைவுத் திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களும் திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்று சட்டத்தை இயற்றவேண்டுமென்று தெரிவித்ததின் அடிப்படையில், அந்தச் சட்டம் இயற்றப்பட்டு, அதன் காரணமாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டுள்ளன.

திருமணம், மண விலக்கு, சொத்துரிமை மற்றும் வாரிசுரிமை சட்டங்களைப் பொறுத்து அவர்களுக்கு தனியானதோர் சட்டத்தின் மூலம் பேணப்பட்டு வருகிறார்கள். இஸ்லாமியத் திருமணங்கள், மண விலக்குகள், ஊர் உறவினன் முறைஜமாஅத், அரசால் நியமிக்கப்படும் காஜியாலேயே பதிவு செய்திடும் முறைபல ஆண்டுக்காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது.

அதற்கும் கூடுதலாக தற்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பேரில் இயற்றப்பட்டுள்ள "திருமணப் பதிவு'' சட்டத்தினால் இன்னொரு முறையும் என்று நுழைக்கப்பட்டு, அவர்களது மார்க்க நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று இஸ்லாமிய பெருமக்களின் பல்வேறு பிரதிநிதிகள் அரசிடம் முறையிட்டு வருகிறார்கள்.

எனவே இந்தப் பிரச்சினை குறித்து இஸ்லாமிய சமுதாயத்தினரின் பிரதிநிதிகளை மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் அழைத்துப் பேசி, இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்டுத்தும் வகையில் ஆவண செய்திட வேண்டுமென்று இப்பொழுதுக்குழு வலியுறுத்துகிறது.

INTJ திரட்டி

Syndicate content