INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,204
  • Visitors:
  • Today: 12
    This week: 308

மொராக்கோவில் மசூதி இடிந்து 41 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பள்ளிவாசல் கோபுரம் இடிந்து விழுந்ததில் 41 பேர் பலியாகினர். 76 பேர் காயமடைந்தனர்.

 மொராக்கோவின் புராதன நகர்களில் ஒன்றான மெக்னெஸில் சனிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் படுகாயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மஸ்ஜித் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது. இதன் கோபுரம் பலமிழந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையில் கோபுரம் மேலும் பலமிழந்ததே இவ்வளவு பெரிய விபத்துக்கு காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்நாட்டு மன்னர் முஹம்மது, உள்துறை அமைச்சரையும், சமய விவகாரத் துறை அமைச்சரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 51 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இன்னும் 20 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. யுனெஸ்கோவால் புரதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த இந்த பள்ளியை சீரமைக்க  மன்னர் முஹம்மது உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

INTJ திரட்டி

Syndicate content