INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை!

பிளஸ் 2 தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 
மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 1200 பறக்கும் படைகள் அமைக்க தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்வில் ஒழுங்கீனங்களை தடுக்க பறக்கும் படை அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 40 பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை கண்காணிப்பார்கள்.
தேர்வு எழுதும் போது துண்டுச் சீட்டு வைத்திருப்பது, அச்சிட்ட புத்தகங்களை வைத்திருப்பது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மற்ற மாணவர்களின் விடைத்தாளை பார்த்து எழுதினால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
 
தேர்வு எழுதும் போது துண்டுச் சீட்டு வைத்திருப்பது, அச்சிட்ட புத்தகங்களை வைத்திருப்பது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மற்ற மாணவர்களின் விடைத்தாளை பார்த்து எழுதினால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
 
தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலும் தேர்வு முடிந்து வெளியில் செல்லும் போதும் முறைகேடான செயல்களில்
ஈடுபடும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாளை வாங்கி எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு மையங்களில் தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர், மாணவ மாணவியர் ஆகியோர் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்வார்கள். பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்து வரக்கூடாது.

 

தகவல்  தினகரன்.

INTJ திரட்டி

Syndicate content