INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்!

நாடு முழுவதும் பிளஸ் 2 வகுப்பில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்த டெல்லியில் 16.02.2010 அன்று நடந்த பள்ளி கல்வி வாரிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி வரும் 2011ம் ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களுக்கும் கணிதம், வணிகவியல் பாடங்களுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும்.
 
பள்ளி கல்வி வாரிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் 16.02.2010 அன்று நடந்தது. அனைத்து மாநில கல்வி வாரியங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் பிளஸ் 2 வகுப்பில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்துவது, பொறியியல், மருத்துவம், வணிகவியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: எல்லா மாநிலங்களிலும் பிளஸ் 2 வகுப்பில் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்படுத்துவது அவசியம். இதற்கு 20 மாநில கல்வி வாரியங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. ஏற்கனவே, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதத்துக்கான அடிப்படை பாடத்திட்டத்தை பள்ளி கல்வி வாரிய கவுன்சில் இறுதி செய்துள்ளது. வணிகவியலுக்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும்.
 
இந்த புதிய பாடத்திட்டத்தை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கும், கணிதம், வணிகவியல் பாடத்துக்கும் புதிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு 2011ல் வெளியிடப்படும். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் இந்த பாட புத்தகங்களே கடைப் பிடிக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமலாகும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

 

நன்றி : தினகரன்.

INTJ திரட்டி

Syndicate content