- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இறையருளால் 07.02.2010 ஞாயிறு அன்று இராமநாதபுரம் தாஜ் பேலஸ் வளாகத்தில் உலக பொதுமறை திருக்குர்ஆன் அழைக்கிறது என்ற அருமையான நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது.
நிகழ்ச்சியினை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸ்ஸம்மில்ஹார் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ் அவர்கள், இதஜவின் வயது மூத்த உறுப்பினரும், பொருளாளர் அபூபக்கரின் தகப்பனாருமான அப்துல் ஹன்னான் ஸஹாப் அவர்களுடன் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ரஸ்தா செல்வம் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சையது முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் முனீர் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மாவட்டத் செயலாளர் ஹஸன் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்த இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்கள், உலக பொதுமறை குர்ஆன்தான் என ரத்தினச் சுருக்கமாக விளக்கினார். அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது அவர்கள், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? என்ற தலைப்பில் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை விளக்கினார்.
ஷார்ஜா மண்டலப் பொறுப்பாளர் கமால் நாஸர் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்தீக் அவர்கள், கண்ணியமிக்க இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் சிறப்புகளை எடுத்துக்காட்டினார். திருக்குர்ஆனின் விஞ்ஞான உண்மைகளை வியக்குதகு முறையில் மாநிலப் பொருளாளர் அபூபக்கர் (எ) தொண்டியப்பா அவர்கள் சொல்லிக் காட்டினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விண்டிவி நிறுவனர் தேவநாதன் அவர்கள் இஸ்லாத்தின் பெருமைகளை கூறினார். இறுதியாக மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் இஸ்லாத்தின் தாத்பாரிய கொள்கை ஏகத்துவம் குறித்து மிக அருமையாக விளக்கிய விதம் கலந்து கொண்ட மாற்று மத மக்களை மகிழ்வித்தது.
சுமார் 400 திருக்குர்ஆன் பிரதிகள் கலந்து கொண்ட மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மகளிர்
அணிச் சகோதரிகள் ரஹ்மத் நிஸா, ஆமீனத்து ஸுலைஹா, மீரா உம்மாள், ஸாமிலா உள்ளிட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட மாற்று மத சகோதரிகளுக்கு திருக்குர்ஆனை வழங்கி அறவுரைகளையும் வழங்கினர்.
தமுமுக கீழக்கரை நகர் தலைவர் முஜிபு ரஹ்மான், உஸ்மான் ஸேட் மற்றும் SDPI மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எம்.கே.ஜமாலுதீன் இபுராஹீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் ஹாஜா, ஹாஜா அணீஸ், நியாஸ், அப்பாஸ், ஸுல்தான், அரஃபாத், ஸி்த்தீக், ஹக்கீம் உள்ளிட்ட சகோதரர்கள் மிக அருமையான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர். முன்னதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்றும், தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசிற்கு மாநிலத் தலைவர் கோரிக்கை வைத்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
படங்கள் மற்றும் செய்தி : கீழை அப்பாஸ், அரஃபாத்


