INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

முன் மாதிரி முஸ்லிம் கிராமம்!

முதியோர் உதவித் தொகை வழங்கும் முன் மாதிரி ஜமாஅத் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் ரிப்போர்ட்டில் வெளிவந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார் கள். தற்போது அதே இளையான் குடி புதூரில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்.

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே உள்ள புதூர் சுமார் 800 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட சிறிய ஊர். நகரமும் கிராமமும் அற்ற நடுத்தரமான அழகிய ஊரான புதூரைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

வட்டியைத் தடை செய்த ஊர்!

திருவல்லிக்கேணியில் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. சென்னையில் வாழ்ந்தாலும் சொந்த ஊரின் மேல் அக்கறை கொண்ட இவ்வூர் இளைஞர்கள், புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம், அழகிய கடன் உதவி அறக்கட்டளை அல்ஹுதா மதரஸô போன்ற அமைப்புகளை நிறுவி, பல்வேறு மார்க்கப்பணி மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருவதோடு பிறந்த ஊரான புதூர் முன்னேற்றத்திலும் அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

பைனான்ஸ் மற்றும் சீட்டு எனும் பெயரில் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் புதூரில் உள்ள ஏழை எளியவர்கள் சிக்கி அதனால் பல்வேறு இன்னல்களுக்கும், ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகி வருவதாகவும், இதனால் பல தீமைகளுக்கும் இந்த வட்டி எனும் அரக்கன் வழிவகுப்பதாகவும் அறிந்து, மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் ’புதூர் மக்கள் உதவிக் குழு'' எனும் பெயரில் குழு அமைத்து விசாரித்ததில், 15கும் மேற்பட்ட பிற மதத்தைச் சேர்ந்த சீட்டுக் கம்பெனிக்காரர்கள் தினமும் ஊருக்குள் சுமார் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளில் வட்டிக்குப் பணம் கொடுத்து லேவாதேவியில் ஈடுபட்டு வசூலுக்கு வருவதாக அறிந்து, அவர்களை அழைத்து விசாரித்ததில் சுமார் எட்டு லட்சம் வரை கடன் கொடுத்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு ஊரில் அறிவிப்புச் செய்து கடன் வாங்கிய அனைவரையும் தங்களது கணக்கு நோட்டுக்களை எடுத்து வரச் சொல்லி ஆய்வு செய்ததில் சுமார் 6,50,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது தெரிய வந்தது.

 ஃபைனான்ஸ்காரர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து மக்களை கசக்கிப் பிழியும் வட்டியின் தீமையையும், வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளையும் எடுத்துச் சொல்லி வட்டியை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்கள் எல்லாம் திவாலாகி வருவதையும், அதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளையும் சுட்டிக் காட்டினார் குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான்.

அசல் மற்றும் வட்டி போக, அதன் பின் உங்களது பாக்கித் தொகையில் 30% மட்டுமே திரும்பத் தர முடியும். அதையும் வரும் மே மாதம் 15ந் தேதி அன்று வந்து நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை மக்களிடம் வசூல் செய்ய ஊருக்குள் வரக் கூடாது. யாருக்கும் வட்டிக்கும் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுப்பதாகவோ, வசூலிப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஒப்பந்தம் எழுதி இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.

மேலும் வட்டிக்குப் பணம் வாங்கிய மக்களை அழைத்து, அவர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான், "இஸ்லாத்தின் பார்வையில் கடன்'' எனும் தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தி, கடனைப் பற்றியும் அதனால் ஏற்படும் சூழ்நிலைகள், விளைவுகளைப்  பற்றியும் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்.

"இருப்பினும் அவசரத் தேவைக்கு அவர்கள்தானே உதவுகிறார்கள். ஏழைகளாகிய எங்களுக்கு மாற்று வழி என்ன?'' என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இதற்குத் தீர்வாக, உடனடியாக ஒரு குழு ஏற்படுத்தி தற்காலிக நிதியாக ரூ. 60,000ஐ ஏற்பாடு செய்து, முப்பது சதவீதத் தொகையை முதலில் செலுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்து, சென்னை சென்றதும் புதூர் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு நிரந்தர நிதியமைப்பையும் ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் ஊரின் நுழைவாயிலில் வட்டி தடை செய்யப்பட்ட ஊர் என்ற போர்டையும் நிறுவ முடிவு செய்து உடனடியாக நிறுவப்பட்டது. புதூரைப் பின்பற்றி மற்ற முஸ்லிம் ஜமாஅத்துகளும் அல்லாஹ்வினால் ஹராமாக்கப்பட்ட வட்டியைத் தடை செய்ய முன் வந்து, ஜகாத்தை சரியான முறையில் வசூலித்து கந்து வட்டிக்காரர்களிடமிருந்து கடன்பட்ட மக்களை காக்க வேண்டும். செய்வார்களா?

- மங்கோலியன்.

 

 

INTJ திரட்டி

Syndicate content