INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

குர்ஆன் ஓதுபவரின் படித்தரம்!

குர்'ஆனை ஓதுகின்றவரின் நிலை பற்றிய ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்: Sahih Muslim Chapter 6 Part 37 No.1461:

அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: குர்'ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறை நம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று: சுவையும் நன்று.

(மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்'ஆனை ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்கனாகவும் இருந்து கொண்டு குர்'ஆனையும் ஓதுகின்றவரின் நிலையானது துளசி செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று: சுவையோ கசப்பு. நயவஞ்கனாகவும் இருந்து கொண்டு குர்'ஆனை ஓதாமலிருப்பவரின் நிலையானது. குமுட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது, சுவையோ கசப்பு. இதை அபூமூசா அல்'அஷ்'அரீ ரலியல்லாஹு அன்'ஹு அவர்கள் அறிவிகின்றார்கள். ஹம்மாம் ரலியல்லாஹு அன்'ஹு அவர்களது அறிவிப்பில் "நயவஞ்சகன்" என்பதற்கு பதிலாக "தீயவன்" என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

-குத்புதீன் ராஜா.

INTJ திரட்டி

Syndicate content