முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்போவதாக மேற்கு வங்க மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு அம்மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கியிருந்த இடஒதுக்கீட்டினை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் மேற்குவங்க அரசு இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

