INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,302

பள்ளிவாசல்களிலும் பள்ளிக் கூடங்கள் அமைய பெற வேண்டும் : எஸ்.எம்.பாக்கர்.

இக்மாத்தே தீன் (தீனை நிலை நாட்டுங்கள்) என்ற தலைப்பில் கடந்த ஜனவரி மாதம் 30,31 ஆகிய தேதிகளில் திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி (ஹிந்த்) நடத்திய மாநாட்டில் இதஜ தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஸோசியல் டெமக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹஸன் அலி உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், "சமூகம் ஒன்று சேராமைக்கும், பாதிப்புக்கு உள்ளாவதற்கும் காரணம் இல்லாமை, கல்லாமை, அறியாமை, பொறாமை இவைகள்தான். இந்த முஸ்லிம் சமுதாயம் கல்வியில் பின்தங்கி இருப்பதை சச்சார் கமிட்டி அறிக்கையின் மூலம் உலகம் அறிந்து வைத்துள்ளது. நாம் அதற்கு முன்பே அறிந்திருந்தாலும், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற முன்னோடி அமைப்புகள் கூட சென்னையில் தற்போதுதான் கல்வி நிலையம் துவங்க முனைந்துள்ளன.

இஸ்லாமிய அடிப்படையில் கல்வி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். பசுமரத்தாணி போல குழந்தைப் பருவத்திலேயே அதாவது ப்ரீ கேஜியில் இருந்தே இந்தக் கல்வி முறையைத் துவங்க வேண்டும் என்ற அவர், பள்ளிவாசல்களில் தொழுகை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பிஞ்சி குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான கல்விக்  கூடங்களாக மாற்றப்பட வேண்டும் என்றார். 

 தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும். பாடத் திட்டங்களில் அரபு மொழியைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆங்கிலத்திற்கு இணையாக முஸ்லிம் நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரபு வெப் சைடுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரபியில் கம்ப்யூட்டர் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. அதனால் அரபிப் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும்.

ஜகாத் (என்னும் ஏழை வரி)தைப் பொறுத்தவரை நபிவழியில் வசூல் முறையையும், விநியோக முறையையும் முறைப்படுத்த வேண்டும். இல்லாமை என்பதைப் போக்க தேவை உடையவரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஜகாத்தை வழங்க வேண்டும். அறியாமை, பொறாமை நீங்கி - சத்திய மார்க்கத்தை நாம் வாழும் பகுதியில் உள்ள பிற மத சகோதரர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொள்வதில் வேகம் காட்ட வேண்டும். திருமறைக் குர்ஆனை மக்கள் மயமாக்க வேண்டும். இந்தப் பணி தொடர்ந்தால், இன்ஷா அல்லாஹ் தீனை நிலை நாட்டலாம்'' என்றார். தனது அறிமுக உரையின்போது, "நான் என் தாய் வீட்டில் பேசுவதைப் போன்று உணருகிறேன்'' என்றார் பாக்கர்.