INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

டெல்லிக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு கோர்ட்டை கட் அடித்த ஜெயலலிதா!

1991-96 ல் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வருமானத்துக்கு அதிகமாக 66.6 கோடி சொத்து சேர்த்ததாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது வழக்கு போடப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது வழக்கு விசாரணை சுதந்திரமாக இருக்காது என்று கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால் வழக்கில் ஆஜராகாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி ஸ்டாலினால் வாய்தா ராணி என்று தேர்தல் பிரசாரத்தில் புகார் கூறுமளவு தாமதப்படுத்திய காரணத்தால், 14 ஆண்டுகளாக இவ்வழக்கு முடிவுறாமல் தொடர்ந்து கொண்டே வந்தது. ஜெயலலிதா நேரடியாக ஆஜராக வேண்டும் என்ற கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் வேறு வழியின்றி கடந்த வியாழன் அன்று ஜெயலலிதா பலத்த பாதுகாப்புக்கு இடையில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதா மொத்தமுள்ள 1339 கேள்விகளில் 567 கேள்விகளுக்குப் பதிலளித்தார். மீதமுள்ள கேள்விகளுக்குச் சனிக்கிழமையன்று (22.10.11) அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க சொன்ன போது, தான் புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்துக்குச் செல்ல வேண்டி இருப்பதால் வர இயலாது என்று பதிலளித்தார். அதற்கு நீதிபதி நவம்பர் 4 அன்று வழக்கை ஒத்தி வைக்க, அன்றும் தனக்கு முக்கிய வேலைகள் இருப்பதாக ஜெயலலிதா பதிலளிக்க வேறு வழியின்றி நவம்பர் 8க்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

நீதிமன்றத்தில் நீதிபதி முன் தான் டெல்லி செல்வேன் என்று ஜெயலலிதா சொன்ன காரணத்தால் கண்டிப்பாக அவர் தேசிய வளர்ச்சி கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தைக் கடுமையாக சாடிய அவரின் அறிக்கையை அமைச்சர் பன்னீர்செல்வம் தான் வாசித்தார்.

சனியன்று வேறு எங்கும் செல்லாமல் போயஸ் தோட்டத்தில் உள்ள தன் வேதா நிலையத்தில் தங்கியிருந்த ஜெயலலிதா ஏன் டெல்லிக்குச் செல்லவில்லை என்பதும் வரும் நவம்பர் 4 அன்று நீதிமன்றத்துக்குச் செல்லாமல் தவிர்க்கும் அளவு அவருக்குள்ள பணிகள் என்ன என்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரோ,  நீதிமன்றம் சொன்னபடி ஜெயலலிதா இரண்டு நாட்கள் ஆஜராகி உள்ளதாகவும் இனி மேல் அவர் நீதிமன்றம் வர மாட்டார் என்றும் இது சம்பந்தமாக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் கூறினார். இது வழக்கம் போல் வழக்கைத் தாமதப்படுத்தும் ஜெயலலிதாவின் தந்திரங்களில் ஒன்றுதான் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.

நன்றி இந்நேரம்.காம்.

INTJ திரட்டி

Syndicate content