INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

பூஷனை தாக்கிய ராம்சேனாவினர் பிணையில் விடுதலை!

காஷ்மீர் பற்றி கருத்து சொன்ன பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்தில் அவரது அறைக்கு சென்று தாக்கிய வழக்கில் கைதான ராம்சேனா இயக்கத்தை சேர்ந்த மூவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ராம்சேனாவை சேர்ந்த மூவருக்கும் தலா சொந்த மற்றும் ரூ. 25,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது எனவும் பெருநகர நீதிபதி சுதேஷ் குமார் கூறினார்.

இந்நிலையில் இதாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க திஜேந்தர்பால் சிங் பாகா, விஷ்ணு குப்தா மற்றும் இந்தர் வர்மா ஆகியோரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து பதிலளித்த நீதிபதி குற்றஞ்சட்டப்பட்டவர்களை காவல்துறை விசாரணைக்கு அனுமதிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை இவர்களின் மீது அத்து மீறி நுழைந்தது தாகுதல் நடத்தியது  போன்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே இ.பி.கோ வில் பதிவாகியுள்ளன. தாக்குதலை தவிர மற்றவை பிணை வழங்கக்கூடிய குற்றங்களாகும் எனவே இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறினார்.

நன்றி இந்நேரம்.காம்.
------------------------------------------------------------------------------------------------------
மேற் கண்ட செய்தியினை காணும் பொழுது, இந்திய நீதிமன்றங்கள் காவியின் பிடியில் இருக்கிறது என்பது நிதர்சனம்.

INTJ திரட்டி

Syndicate content