INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

கட்டாயத் திருமணப் பதிவுச்சட்டத்திற்கு எதிராக இதஜவின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி!

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதகம் விலைவிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையீடு வகையில் உள்ளதாக  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முதன் முதலில் குரல் எழுப்பியது இச்சட்டத்தில் திருத்தங்கள் கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தியது.

பல்வேறு ஜமாஅத்துக்களும், முஸ்லிம் இயக்கங்களும் குறிப்பாக ஜமாஅத்துல் உலமாவும் தமிழக அரசுக்கு திருத்தம் கோரி வலியுறுத்தி வருகின்றனர். இன்னிலையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி : தமிழக அரசின் கட்டாய திருமண பதிவுசட்டம் சிறுபான்மை தனியார் சட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் தலையிடுவதாக முஸ்லிம் அமைப்புகள் பேசிவருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

முதல்வரின் பதில் : இந்த சட்டம் சிறுபான்மை யினருக்கு பாதகமாக உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ள சிறுபான்மை இனத் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும் என்றார்.

கேள்வி : தமிழக சிறைகளில் விசாரனை கைதிகளாக நீண்டகாலமாக பலர் அடைக்கப் பட்டுள்ளனர் அவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலை என்ன?

முதல்வரின் பதில் : இது மாநில அரசு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல மத்திய அரசும் சம்பந்தப் பட்டுள்ளது. நாங்கள் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி வறுகிறோம். பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் விரைவில் தீர்வு காண்பார்கள்.

INTJ திரட்டி

Syndicate content