- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை தாக்குகிறார்கள் என அறிந்ததும் நம் மாநில நிர்வாகிகள் முத்துப் பேட்டை விரைந்தனர்.
அங்கு நடந்த சம்பவத்தை நம்மிடையே அவ்வூரைச் சேர்ந்தவரும் நம் மாநில செயலாளருமான ஷிப்லி அவர்கள் தெரிவித்தாவது:
முத்துப்பேட்டையில் முஸ்லிம் திரண்டு வாழ்கின்றனர் என்ற பொறாமையில் சங்பரிவார் கும்பல் தொடர்ந்து முத்துப்பேட்டையை கலவர பூமியாக ஆக்க முயற்சி்ககின்றனர்.
சில தினங்களுக்கு முன் வியாபார விஷயமாக தாவூது என்ற சகோதரர் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் பேட்டை என்ற இடத்திற்கு சென்ற பொழுது அங்கு பிஜேபியைச் சேர்ந்த சிவா மற்றும் அவனது கூட்டாளிகளால் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட தாவூது முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
பிஜேபியினருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இவர் அளித்த புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
ஆனால் பிஜேபி கும்பலின் தலைவன் சிவா, தன் டாடா சுமோ வாகனம் கல் எறிந்து தாக்கப்பட்டதாகவும், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகவும் அதனால் தனக்கு தக்க பாதுகாப்பு வேண்டும் என புகார் செய்து அலப்பரை செய்தான். காவலர்கள் அவனை சமாதனப்படுத்தி தக்க பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு சென்ற சிவா, சில அடியாட்களுடனும் ஆயுங்களுடன் வந்து முஸ்லிம்களை நோக்கி ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனைகளை அரங்கேற்றியதுடன், முஸ்லிம்களின் வீடுகள் மீதும் கற்களை வீசியுள்ளான். தெருவில் நடமாடிய முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் செய்துள்ளான். இதை உடனே முஸ்லிம்கள் காதுறைக்கு தகவல் தந்துள்ளனர். ஆனால் காவல்துறை வர கால தாமதமானதால் முஸ்லிம்கள் தங்களை தாஙகளே தற்காத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கலவரம் வெடித்ததும், அதன் பிறகு வந்த காவல்துறை முத்துப்பேட்டைக்கும் பேட்டைக்கும் இடையில் சுவர் போல் மறித்துக் கொண்டு முத்துப் பேட்டை முஸ்லிம்களை பேட்டையில் தத்தளிக்கும் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
இதையறிந்து முத்துப்பேட்டை இதஜ நிர்வாகிகள், தலைமையை தொடர்பு கொண்டனர். நள்ளிரவு என்றும் பாராமல் துணைப் பொதுச் செயலாளர் ஸையது இக்பால் மற்றும் மாநிலச் செயலாளர் ஷிப்லி ஆகியோர் காவல்துறை மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு துரித நடவடிக்கையை மேற் கொள்மாறு வற்புறுத்தினர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீண் குமார் அபிநவ், மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் துரைராஜ் ஆகியோரை தொடர்பு கொண்டு நிலைமையை குறித்து விசாரித்தப் பொழுது, அவர்கள் நிலையை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்றும், இனி எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.

கலவரத்தில் அபூதாஹிர் என்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கரையாக்கப்பட்டன. மனார் மோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பின்புறப் பகுதி தீக்கரையாக்கப்பட்டது.

முத்துப்பேட்டைக்கு நேரில் சென்ற மாநிலச் செயலாளர்கள் ஷிப்லி, அப்துல் ஹமீது மற்றும் வேளாச்சேரி ஸிராஜ் ஆகியோர் நிகழ்விடங்களை பார்வையிட்டனர். பாதிக்கப்ட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். பிரவீண் குமார் அபிநவை நேரில் சந்தித்து கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பாவிகளை கைது செய்வதை தவிரக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவர்களது கோரிக்கைகளுக்கு பதில் அளித்த அபிநவ், முத்துப் பேட்டையில் அமைதி நிலவதற்கான அத்தனை முயற்சியினையும் எடுப்பேன் என்றும், அதற்கு போதிய ஒத்துழைப்பை வழங்குமாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
காவலர்கள் பெருமளவு குவிக்கப்பட்டு தனது கட்டுப்பாட்டி்ல் காவல்துறை வைத்திருந்தாலும் மக்களிடம் ஒருவித அச்சம் நிலவுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபூதாஹீரை தஞ்சை மண்டல நிர்வாகிகள் ரஸுல் முஸ்தஃபா மற்றும் ஷம்ஸுதீன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
கலவரத்திற்கு காரணமே காவல்துறையின் ஒருதலைபட்ச போக்குதான். சிவா ஆட்களால் தாக்கப்பட்ட தாவூது கொடுத்த புகாருக்கு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது. சிவா கொடுத்த புகாருக்கு பாதுகாப்புடன் அனுப்பிய காவல்துறை, அப்போதே முறையான பாதுகாப்பை போட்டு இருந்தால் இக்கலவரம் ஏற்பட்டு இருக்காது.
கலவரக்காரர்களை கைது செய்கின்றோம் என்ற பெயரில் பிஜேபி கும்பலுக்கு சமமாக அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்படுகின்றனர். கலவரக்காரர்களை கைது செய்வது போல் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டோரையும் கைது செய்வது எவ்வகையில் நியாயம்? மூல காரணமாக இருந்த சிவாவின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது காவல்துறையின் ஹைலைட் விஷயம்.
பிரவீண் குமார் அபிநவ் போன்ற நேர்மையான அதிகாரிகள் உள்ள நிலையில், இம்மாதிரியான அநிதீகளுக்கு முஸ்லிம்கள் உள்ளக்கப்படுவது வேதனையான விஷயம்.
திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய பிஜேபி கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


